மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்

மறக்கக் கூடாத சில முன்னோர்களின் பழமொழிகள்

(1) பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு
உண்ணலாம் :

பகைவன் வீட்டு உணவு என்பது விஷம் போன்ற
விஷயங்களால் நம்மை அச்சுறுத்தலாம். அதற்கும்கூட
10 மிளகு இருந்தால் போதும். உணவின் விஷம் நீங்கும்
என்பதை மேம்படுத்திக் கூறும்பொருட்டு 10 மிளகு
இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்
என்று கூறியுள்ளனர்.

(2) நொறுங்கத் தின்றால் நூறு வயது:

அஜீரணம் இல்லாத வாழ்வே நீண்ட வாழ்நாளுக்கு
வழிகோலும். அதற்கு நாம் உண்கிற உணவு ஒன்று
உமிழ்நீருடன் கலந்து அரைக்கப்பட்டதுதான் உணவு
இரைப்பையில் செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

அவசர கதியாக சரியாக நொறுங்காமல் தின்றால்
அது அஜீரணத்திற்கு வழிகோலும். அஜீரணமே
அனைத்து நோய்க்கும் காரணம்.

(3) லங்கனம் பதமம் ஒளஷதம்:

லங்கனம் என்றால் பட்டினி கிடத்தல் என்று பொருள்.
பதமம் என்றால் சிறந்தது/ உயர்ந்தது என்று பொருள்.
ஒளஷதம் என்றால் மருந்து என்று பொருள்.

பட்டினியே மிகச் சிறந்த மருந்து. ஆம்…
உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அளித்தலே மிகச் சிறந்த
மருந்து. அதை பட்டினி மூலம் நிறைவேற்றலாம்.

(4) மாதுளை, தாதுவேளை வளர்ந்த வீடு…
வயிற்றிலே நெஞ்சிலே கணக்கம் இல்லை!:

மாதுளை வயிற்றிலும் ஏற்படும் பிரச்னைகளுக்கு
சிறந்தது தாதுவேளை. நெஞ்சில் ஏற்படும் சளித்
தொந்தரவுகளுக்குச் சிறந்தது.

(5) கந்தை ஆனாலும் கசக்கி கட்டு… கூழானாலும்
குளித்துக் குடி:

கந்தல் ஆடை என்றாலும் அவற்றை நன்றாக துவைத்து
பயன்படுத்த வேண்டும். கூழ் என்றால் குளித்த
பின்னும்தான் குடிக்க வேண்டும் என்பதாகும்.

இது ஆரோக்கியத்திற்காக வாழ்க்கை நடைமுறையை
மேம்படுத்துவதற்கு கூறப்பட்டதாகும்.

இதுபோன்று பல்வேறு வித மருத்துவ கருத்துக்களைப்
பழமொழி மூலமாக கூறிச் சென்றுள்ளனர். இதேபோல்
இன்னும் பல முதுமொழிகளை முன்னோர்கள் கூறிச்
சென்றுள்ளனர். ஆக முன்னோர்களின் சொல்லிலும்
ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது என்பதை இதன்மூலம்

அறியலாம்.


நன்றி-குங்குமம் டாக்டர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: