வெள்ளத்தில் 2.5 கி.மீ. நீந்தி வந்து பதக்கம் வென்ற ஷான் மனோகர்

வெள்ளத்தில் 2.5 கி.மீ. நீந்தி வந்து பதக்கம் வென்ற ஷான் மனோகர் 511262


பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பை ஒட்டியுள்ள 
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்தில் 
உள்ள மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை 
வீரரான 19 வயதான நிஷான் மனோகர் கதம், 
பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில 
அளவிலான சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொள்ள 
இருந்தார்.

இதற்காக கடந்த 7-ம் தேதி அவர் புறப்பட தயாரான போது 
கன மழை காரணமாக வீடு மற்றும் கிராமத்தை சுற்றியுள்ள 
பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. 

அவரது கிராமத்தில் உள்ள 3 சாலைகளும் கடும் சேதம் 
அடைந்தன. குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள 
மாவட்ட அணியுடன் சென்று இணைய வேண்டுமானால் 
நிஷான் மனோகருக்கு ஒரே வழி மழை வெள்ளத்தை கடந்து 
செல்வதுதான்.

இதையடுத்து நிஷானும் அவரது தந்தையும் விவசாயியுமான 
மனோகரும் குத்துச்சண்டை போட்டிக்கான உபகரணங்களை
பிளாஸ்டிக் பையில் இறுக கட்டிக்கொண்டு மழை வெள்ளத்தை 
நீந்தி கடக்க முடிவு செய்தனர். 

இதன்படி சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் 
நீந்திச் சென்று பெல்காவி குத்துச்சண்டை மாவட்ட அணி 
காத்திருந்த பிரதான சாலையை அடைந்தனர்.

அதன் பின்னர் மாவட்ட அணியினருடன் இணைந்து நிஷான் 
மனோகர் ரயில் மூலம் பெங்களூரு பயணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடபெற்ற மாநில 
அளவிலான போட்டியில் பங்கேற்ற நிஷான் மனோகர் லைட் 
பிளைவெயிட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

நிஷான் மனோகர் கூறுகையில்,“மாநில குத்துச்சண்டை 
போட்டிக்காக நான் காத்திருந்தேன். இதனால் அதை இழக்க 
விரும்பவில்லை.

எங்கள் பகுதி தண்ணீரினால் சூழப்பட்டிருந்ததால், 
வாகனங்கள் எதுவும் நுழைய முடியவில்லை. இதனால் 
நீந்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

இந்த முறை துரதிர்ஷ்டவசமாக தங்கப் பதக்கத்தை இழந்தேன். 
அடுத்த ஆண்டு, நிச்சயமாக தங்கத்தை வெல்வேன்” என்றார்.

பெலகாவி மாவட்ட குத்துச்சண்டை அணியின் மேலாளர் 
திரிபாதி கூறுகையில், ‘‘மாநில சாம்பியன்ஷிப் தொடர் குறித்து 
அறிந்ததும் அங்கு செல்ல வேண்டும் என நிஷான் விருப்பம் 
தெரிவித்தார். 

எப்படியும் தனது கிராமத்தில் இருந்து நீந்தி வந்து விடுவேன் 
என கூறினார். இதனால் அவர் பகுதியை ஒட்டி உள்ள பிரதான 
சாலையில் இருந்து அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம்.

நிஷான் அவரது தந்தையுடன் வீட்டில் இருந்து மாலை 3.45 மணி 
அளவில் புறப்பட்டு நீந்தியவாறு நாங்கள் காத்திருந்த பகுதியை
4.30 மணி அளவில் அடைந்தனர். 

அதன் பின்னர் மற்ற 6 வீரர்களுடன் இணைந்து நிஷான் 
பெங்களூருக்கு புறப்பட்டார். நிஷானின் கதையும், அவரது செயல் 
திறனும் இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பை சிறப்பானதாக்கி உள்ளது” 
என்றார்.

————————-
இந்து தமிழ் திசை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: