ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் 
அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 94வது பிறந்தநாள் 
இன்று

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள் _102943452_6fa936f9-fb78-42af-841b-a1add8c1d3f4


படத்தின் காப்புரிமைAFP
———————
1. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 
அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 
அவரது தந்தை ஏன்ஜல் மரியா படிஸ்டா காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ் 
ஸ்பெயினில் இருந்து கியூபா குடிபெயர்ந்த ஒரு பெரு விவசாயி 
ஆவார்.

2. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் கரும்பு விவசாயம் செய்து 
வந்த ஏன்ஜல் மரியாவின் முதல் மனைவி இறந்தபின், தனது 
வீட்டின் பணியாளாக இருந்த கியூப பெண் லினா ரஸ் கொன்சலஸ் 
உடன் அவர் வாழத் தொடங்கினார்.

3. இந்த தம்பதிக்கு பிறந்த ஏழு குழந்தைகளில் முதல் குழந்தை 
ஃபிடல். ஏன்ஜல் மரியா மற்றும் லினா ஒரே வீட்டில் வாழ்ந்த
போதும் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தபின்தான் திருமணம் செய்து 
கொண்டனர். இரண்டாவதாக பிறந்த குழந்தை ராவுல் காஸ்ட்ரோ. 
அடுத்த ஐவரும் பெண் குழந்தைகள்.

4. பள்ளிக் காலங்களில் படிப்பைவிட விளையாட்டில் அதிக 
கவனம் செலுத்திய ஃபிடல் காஸ்ட்ரோ, 1940களில் ஹவானா 
பல்கலைகழகத்தில் படித்தபோது அரசியலில் ஈடுபடத் 
தொடங்கியதுடன் தனது பேச்சுத் திறனையும் வளர்த்துக்
கொண்டார்.

5. பல்கலைக்கழக மாணவரான ஃபிடல் காஸ்ட்ரோ 1946இல் 
அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின்
அரசின் ஊழலுக்கு எதிராக நிகழ்த்திய உரை அப்போது 
மிகவும் பிரபலமானது.

6. 1947இல் டோமினிக்க குடியரசின், அமெரிக்க ஆதரவு பெற்ற 
சர்வாதிகாரி ரஃபேல் டிரோஜிலோவின் அரசைக் கலைக்கும் 
முயற்சியில், கியூபாவில் இருந்த டோமினிக்க குடியரசு 
மாணவர்களுடன் கடல் வழியாகக் கிளம்பினார். இம்முயற்சி 
அமெரிக்க ஆதரவுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

7. காஸ்ட்ரோ – மிர்தா டையாஸ் பாலார்ட் திருமணம் 1948இல் 
நடந்தது. இரு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் 
திருமணம் இது.

8. அதிபர் கார்லஸ் ப்ரியோவின் அரசுக்கு எதிராக ராணுவப் 
புரட்சி மூலம் 1952இல் கியூபா அதிபரானார் 
ஜெனரல் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. அவரது ராணுவ 
சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜூலை 1953இல் மான்கடாவில் 
இருந்த ஆயுதக் கிடங்கைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட
காஸ்ட்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர்.

9. காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை 
விதிக்கப்பட்டாலும்,பொது மன்னிப்பு வழங்கப்பட்டு
19 மாதங்களுக்கு பிறகு மே 1955இல் விடுதலை செய்யப்
பட்டார்.

10. அதே ஆண்டு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ, அங்கு தனது
வருங்கால சக போராளி மற்றும் நண்பரான எர்னஸ்டோ
‘சே’ குவேராவை சந்திக்கிறார்.

11. நவம்பர் 1956இல் ஃபிடல், ராவுல், சே உள்ளிட்ட 81 போராளிகள், 
12 பேர் மட்டுமே பயணிக்க உகந்த கிரான்மா எனும் சிறிய 
படகில் புரட்சியில் ஈடுபட மெக்சிகோவில் இருந்து கியூபா 
திரும்பினர். 

1959இல் கியூப புரட்சி வெற்றிபெறும் வரை, மலைப் பகுதிகளில் 
பதுங்கியிருந்து இந்தக் குழு கொரில்லா போரில் ஈடுபட்டது.

12. கியூபப் புரட்சி 1959 ஜனவரியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 
மனுவேல் உருசியா லியோ கியூப அதிபரானார். அவரது அரசில்
ஜோஸ் மிரோ கார்தோனா பிரதமரானார். கருத்து வேறுபாடு 
காரணமாக அவர் ஆறு வாரங்களில் பதவி விலகியதால், 
காஸ்ட்ரோ 1959 பிப்ரவரி மாதம் பிரதமர் பொறுப்பேற்றார்.

13. அதே ஆண்டு ஜூலை மாதம், கருத்து வேறுபாடு காரணமாக 
மனுவேல் பதவி விலகியும் ஃபிடல் பிரதமராகவே தொடர்ந்தார். 
ஓஸ்வால்டோ டோர்டிகோ தொராடோ அப்போது புதிய அதிபரானார்.

ஆனால், அதிபர் பதவி, பிரதமரைவிட அதிகாரம் குறைந்த 
ஒரு சம்பிரதாய பதவியாகவே இருந்தது. 1976 டிசம்பரில்
அரசியலமைப்பு மாற்றப்படும் வரை அவர் அதிபர் பதவியில் 
நீடித்தார்.

14. அதன் பின் பிரதமராக இருந்த காஸ்ட்ரோ, அதிபர் பதவியேற்றார். 
அப்பதவியில் பிப்ரவரி 2008 வரை காஸ்ட்ரோ நீடித்தார். காஸ்ட்ரோ 
கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபராக இருந்து ஆட்சி செய்த 
ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு 10 பேர் அதிபராக இருந்தனர்.

——————————————
பிபிசி-தமிழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: