மணக்கும் ஜவ்வரிசி வடாம்!

கோடை காலம் வந்துவிட்டால் வீட்டு மொட்டை மாடியில்
வடாம் காயவைப்பது வழக்கம். வடாம் வற்றல் செய்யும்
போது இதை பின்பற்றுங்கள் தோழிகளே!

*வடாம், வற்றல் செய்யும்போது கூழ்மாவுடன் சிறிது
நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது கமகம
என்று மணக்கும்.

*வடாம் வைக்கும்போது இடையிடையே மிளகாய்
வற்றலை வைத்து விட்டால் அணில், காக்கை வராது.

*வடாம் வைக்கும் டப்பாவில் மிளகாயைப் போட்டு
வைத்தால் பூச்சிகள் வராது.

*குழம்பு கருவடாம் செய்யும்போது சிறிது கறிவேப்பிலையை
அரைத்துச் சேர்த்தால் சுவை கூடும்.

*வடாம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் போட்டு
வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.

*ஜவ்வரிசி வற்றல் மாவில் காரச்சுவைக்கு மிளகு,
சீரகப்பொடி கலந்தால் சுவையும், மணமும் நன்றாக
இருக்கும். உடம்புக்கும் நல்லது.

*எந்த வடாமானாலும் பெருங்காயம் சேர்ப்பது
வாசனையைக் கூட்டும். உடம்புக்கும் நல்லது.

*ஜவ்வரிசி வற்றலில் நீர் அதிகமாகி விட்டால் சிறிதளவு
அவலை நீரில் ஊற வைத்து நீரை வடித்து அதில் கலந்து
விட்டால் கூழ் கெட்டியாகிவிடும்.

*எந்த வடாமாக இருந்தாலும் சிறிது சோம்பு, லவங்கம்,
கசகசா ஆகியவற்றை வறுத்துப் பொடித்து கூழுடன்
கலந்து விட்டால் மசாலா வடாம் ரெடி.

*வடாம் கூழில் சிறிது வேப்பம்பூவைச் சேர்த்தால்
சுவை கூடும். உடம்புக்கும் நல்லது.

*ஜவ்வரிசி வடாம் கூழில் உப்பு அதிகமாகி விட்டால் மேலும்
சிறிது ஜவ்வரிசியை வேக வைத்துக் கலந்துவிட்டு காய

வைத்தால் போதும்.


  • ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
    அன்னம் அரசு,
    ஏ.டி.தமிழ்வாணன்
    நன்றி-தினகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: