ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்

ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்

ப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம்.

ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்

ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகளும், அறுவை சிகிச்சை முறைகளும்ப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண் இனவிருத்தி உறுப்புகளில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சிறு நீர்க்குழாயைச் (Urethra) சூழ்ந்து இருப்பதால் இந்திரியத்தில் பெரும்பான்மையான திரவம் இதிலிருந்து தான் வருகிறது. உடல் உறவின் போது உறுப்பு விரைப்பாக இருப்பதற்கு இச்சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது.

இச்சுரப்பி வீங்குவதால் பல குழப்பங்கள் வர வாய்ப்புண்டு. இதனை ஆங்கிலத்தில் Benign Prostatic Hyperplasia (BPH) என்பர். BPH ஆல் சிறுநீர்க் குழாய் நெருக்கப்பட்டு, குழாய் அளவு (விட்டம்) குறைகிறது.

50 வயதுக்கு மேலான ஆண்களுக்கு BPH வர வாய்ப்புண்டு. ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வால் இச்சுரப்பி பெரிதாகலாம். சிறுவயதிலேயே விந்துக் கொட்டைகள் அகற்றப்பட்ட ஆண்களுக்கு BPH ஏற்படுவதில்லை.

அறிகுறிகள்

ஆரம்பத்தில் அதிகளவு பாதிப்பு இல்லாவிடினும் போகப்போக கவனிக்காவிட்டால் எல்லையில்லாத தொல்லையாக மாறிவிடும்.

1. சிறுநீர் கழித்தலில் நிறை வின்மை. 2. இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல். 3.சிறுநிர் கழித்தபின் சொட்டு சொட் டாக சிறுநீர் ஒழுகுதல். 4.சாதாரணமாகவே சிறுநீர் வடிதல். 5.சிரமத்துடன் சிறுநீர் கழித்தல். 6.அவசர அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. 7.மிகத் தாமதமாக சிறுநீர் வெளியா தல். 8.வேதனையோடு சிறுநீர் கழித்தல். 9.சிறுநீரில் இரத்தம் போதல்.

சோதனை செய்தல்

1.உட்பரிசோதனைகள், 2. சிறுநீர் பையில் மீதியிருக்கும் நீர் அளவு. 3. PSA (எதிர் அணு பரிசோதனை). 4. Urodynamic Test 5.சிஸ்டாஸ்கோபி – சிறுநீர்ப்பையின் உள்நோக்கி. 6. IVP படம் எடுத்துப் பார்த்தல். 7. CT Scan. மனநோய் மருந்துகள், சிறுநீர் அதிகம் போக எடுக்கும் மருந்துகள், தூக்க மாத்திரைகள் இன்னபிற மருந்துகள் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு அல்ல.

சிகிச்சை முறைகள்

இயற்கை வைத்தியங்கள் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் அடக்காமல் இருக்க வேண்டும், தானகவே மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணாதிருத்தல், மது, காபி, புகைபிடித்தல் வேண்டாம், மனஅழுத்தம் வேண்டாமே, உடற்பயிற்சி அவசியம். எப்போதும் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல்.

சில மருந்துகள் (மருத்துவர் ஆலோசனையோடு) (ஆல்பா I Blockers ) உட்கொள்ளலாம்.

ஹார்மோன் வைத்தியம்:- டெஸ்டோஸ்டிரானைக் குறைக்கும் வைத்திய முறைகள். ப்ராஸ்டேட் சுரப்பி அளவைத் குறைக்கும் ஆனால் இயலாமை (Impotence) வரலாம்.

அறுவை சிகிச்சை முறைகள்

TUMA கதிர்வீச்சால் ப்ராஸ்டேட் சுரப்பியைச் சுருங்க வைத்தல். TUMT மைக்ரோவேவ் முறை. WIT சுடுநீரால் திசுக்களை அழித்தல். HIFLL நுண்ணொலி அலைகளால் அபரிமித ப்ராஸ்டேட் திசுக்களை அழித்தல்.

இவை தவிர மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துச் செய்யக்கூடிய சிகிச்சைகள்:-

1. TURP சிறுநீர் போகும் துளைவழியே உள்நோக்கியைச் செலுத்தி ப்ராஸ்டேட் திசுக்களை எடுத்தல்.

2. அறுவை சிகிச்சை மூலம் ப்ராஸ்டேட் எடுத்தல்.

ப்ராஸ்டேட் சுழற்சி (Prostatitis) கிருமிகளால் ப்ராஸ்டேட் பாதிக்கப்படலாம். இதனால் அதிக வேதனை, சிறுநீர் வெளி வர முடியாத நிலை, வலியோடு சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்று துன்பங்கள் வரலாம். தகுந்த மருந்துகள் மூலம் சுழற்சியைச் சுகப்படுத்தலாம்.

Dr. அம்ரித், MBBS, M.S., M.CH. Urosurgery சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ஆண் மலட்டுத்தன்மை நிபுணர் (Urinary Bladder) புற்றுநோய் Dr.ஆக்னஸ் ஜோசப் மருத்துவமனை, பாளையங்கோட்டை

நன்றி-மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: