புகைப்பிடிப்பதை நிறுத்துவது எப்படி…

சிகரெட்டில், 4000க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் 
உள்ளன. மிகவும் அபாயகரமான, நிகோடீன், தார், 
கார்பன் மோனாக்சைடு போன்றவை அதிகம் உள்ளன. 
அவற்றை பற்றி பார்ப்போமா…

நிகோடீன்!
————–
கஞ்சா மற்றும் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களை 
விட, மனிதனை செயலிழக்க வைக்கும் சக்தி வாய்ந்தது சிகரெட். 

புகைக்கும் போது, நுரையீரலைத் துாண்டி, சுறு சுறுப்பு 
உணர்வை ஏற்படுத்தும். ஆனால், உடனே சோர்வு உணர்வு 
தோன்றும். இதை, சரி செய்ய, அடுத்த சிகரெட் தேவைப்படும்; 
நாளாக நாளாக, அதிக அளவு சிகரெட் புகைக்கும் நிலை 
ஏற்படும்.

தார்!
————
புற்றுநோய்க்கு காரணமான நச்சுப்பொருள் இது! 
சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது, பிசு பிசுப்பான 
திரவமாகும். அந்த திரவம், நுரையீரல் பாதையை, சிறிது 
சிறிதாக அடைத்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். 

சுவாச உறுப்புகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும்; 
சுவாச பிரச்னைகளை உருவாக்கும்.

கார்பன் மோனாக்சைடு!
————————-
இந்த விஷ வாயு, எளிதாக ரத்தத்தில் கலந்து, ஆக்சிஜனை 
வெளியேற்றும்; இதனால், இதயம் வேகமாக இயங்க 
வேண்டிய நிலை ஏற்படும். 

புகைப்பதால் ஏற்படும் பாதிப்பு என்ன…
——————————
* இருமல், சளி
* பசியின்மை, உணவு ருசியை உணர முடியாமை
* தெளிவாகச் சிந்திக்க இயலாமை
* செயல்களில் மந்தம், எரிச்சல்.

இவை, புகை பிடிப்பவருக்கு மட்டும் தானா… இல்லை! 

ஒருவர் புகைக்கும் போது, வெளிவிடும் புகையை 
சுவாசிப்பவருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

புகைப்பிடிப்பதால், கறையுள்ள பற்கள், வாய் துர்நாற்றம், 
தோல் சுருக்கம், விரல் நகங்களில் மஞ்சள் படிவு போன்றவை 
பரிசாக கிடைக்கும். 

சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதன் மூலம், வாழ்க்கையை 
மாற்றி அமைக்கலாம்.

நிறுத்துவது எப்படி…
—————–

* புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நேரத்தை 
தீர்மானிக்க வேண்டும். அந்தநேரம், ‘இன்று’ என்பதாக 
இருக்கட்டும்; நாளை என, தள்ளிப்போட வேண்டாம்

* வாழ்க்கை நிகழ்வுகளை திட்டமிட்டு மாற்றியமைக்கவும்

* புகைப்பதை நினைவூட்டும் பொருட்களை குப்பையில் 
வீசவும்

* புகைப்பிடிக்கும் இடங்களையும், சிகரெட் பிடிக்கும் 
நண்பர்களையும் தவிர்க்கவும்

* புகைக்கும் சபலம் வரும் போது, கவனத்தை திசை 
திருப்பவும்

* ‘இன்று புகைக்க மாட்டேன்…’ என்ற தீர்மானத்துடன், 
ஒரு நாளை துவங்கவும்

* புகைக்காத போது ஏற்படும் நன்மைகளை எண்ணிப் 
பார்க்கவும்

* புகைக்க செலவிடும் பணத்தை சேமித்து அளவிடவும் 

* சிகரெட் பிடிக்காதவர் என, பெருமிதம் கொள்ளவும்.

இவற்றை கடைபிடித்தால், புகை பழக்கத்தை கைவிடலாம்.
————————–
– என்றென்றும் அன்புடன், அங்குராசு.
நன்றி-சிறுவர் மலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: