வியாழன் கோவில்!

சிவன் கோவில்களில், சுவாமி எதிரே, நந்தி இருப்பது ஐதீகம்.
ஆனால், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை
அருகிலுள்ள, புளியரை, சதாசிவ மூர்த்தி கோவிலில், சிவன்,
நந்தியுடன், தட்சிணாமூர்த்தியும் இருப்பது வித்தியாசம்.
இதை, வியாழன் கோவில் என்பர்.

சைவ சமயத்தின் தலைநகரான சிதம்பரத்தில், சமண மதம்
வேரூன்றியது. சமணர்களால், சிதம்பரம் நடராஜருக்கு, தீங்கு
நேரும் என, பக்தர்கள் அஞ்சினர். நடராஜர் சிலையை,
குற்றாலம் திரிகூடமலை அருகே, வேணு வனத்திலுள்ள
புளியமரப் பொந்தில் ஒளித்து வைத்தனர்.

சிறிது காலத்துக்கு பின், சைவ சமயம் புத்துயிர் பெற்றது.
இதையடுத்து, புளிய மரப் பொந்தில் ஒளித்து வைத்த
நடராஜரை, மீண்டும் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய
விரும்பினர், பக்தர்கள்.
அவர்களுக்கு சிலை இருந்த இடம் தெரியவில்லை.

அப்போது வானில், ‘நான் வேணு வனத்தில் தங்கியிருக்கிறேன்.
இங்கு, சாரையாகச் செல்லும் எறும்புகளைப் பின்தொடர்ந்து
வந்தால், என்னைக் காணலாம்…’ என்று, அசரீரி ஒலித்தது.

அதன்படி, நடராஜர் இருந்த இடத்தை அறிந்து, சிதம்பரத்திற்கு
எடுத்துச் சென்றனர். அதன்பின், புளிய மரத்தின் அடியில்
பூமியைப் பிளந்தபடி, சுயம்புலிங்கம் தோன்றியது.

அச்சன்குன்றம் என்ற பகுதியை ஆட்சி செய்த மன்னனின்
கனவில் தோன்றிய சிவன், தனக்கு ஒரு கோவில் கட்ட
உத்தரவிட்டார். புளியமரப் பொந்தில் உண்டானதால் இத்தலம்,
‘புளி அறை’ என, பெயர் பெற்றது.
காலப்போக்கில், புளியரை என, மாறி விட்டது.

கருவறையில் சுவாமியும், அம்மனும் கிழக்கு நோக்கி, நித்ய
திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கு
, சதாசிவ மூர்த்தி என, பெயர். அம்பாள், சிவகாமி அம்மன்.

இங்கு, பள்ளியறை பூஜை நடப்பதில்லை.

கருவறை எதிரில், யோக தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.
இருவருக்கும் இடையில், நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்
. சதாசிவமூர்த்தி – லிங்கம், நந்தி, தட்சிணாமூர்த்தி மூவரையும்
ஒரே நேரத்தில் தரிசிக்கும் பாக்கியம், இங்கு மட்டுமே
கிடைக்கும். சதாசிவமூர்த்தி தரும் அருளை, தட்சிணாமூர்த்தி
இரட்டிப்பாக்கி வழங்குவதாக ஐதீகம்.

தட்சிணாமூர்த்தி சன்னிதியில், 27 நட்சத்திரங்களும்
படிகளாக உள்ளன. கோடி தீபம் ஏற்றி, இவரை அர்ச்சித்தால்,
திருமணம், வியாபாரத்தடை நீங்கும். வியாழக்கிழமைகளில்
கூட்டம் அதிகம் இருக்கும்.

நடராஜருக்குரிய ஆனி உத்திரம், ஜூலை 8, அதற்கடுத்து,
மார்கழி திருவாதிரை நாளில், இந்த சிவனை வழிபடுவது
விசேஷம்.

திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வி, வேலை,
வியாபாரங்களில் சிறக்க மற்றும் நாக தோஷங்கள் நீங்கிட
வேண்டிக் கொள்ளலாம்.

வேண்டிய காரியங்கள் நடத்த, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
விசேஷ அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாளுக்கு வஸ்திரம்
சாத்தி பூஜை; குரு பகவான், தட்சிணாமூர்த்திக்கு,
கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி, தயிர் சாதம்
நைவேத்யம் படைத்து, கோடி தீபம்; சனீஸ்வரருக்கு, எள் தீபம்
ஏற்றப்படுகிறது.

தை மாதம், 10 நாட்கள், பிரதான திருவிழா நடக்கும்.
இது தவிர, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, மகா சிவராத்திரி,
நவராத்திரி மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் திருவிழா
நடக்கும்.

காலை, 6:00 மணி முதல், பகல், 12:00 மணி; மாலை, 5:00 மணி
முதல், இரவு, 8:00 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.

மதுரையில் இருந்து செங்கோட்டை, 160 கி.மீ., இங்கிருந்து
கொல்லம் சாலையில், 8 கி.மீ., துாரத்தில் உள்ளது, புளியரை

கோவில்.


தி.சொல்லப்பா
நன்றி- வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: