நம்மிடமே இருக்கு மருந்து – பனை!

இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த பரிசுகள் ஏராளம்.
அவற்றில் அபரிமிதமானது, பனை தரும், நுங்கு மற்றும்
பதநீர். இவை தவிர, பனங்கிழங்கு, பனை ஓலை விசிறி என,
அனைத்தும் பயன்படுகிறது.

 • அம்மை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, இளஞ்சிவப்பில்
  இருக்கும் சிறிய நுங்குகள் சாப்பிட ஏற்றது. வியர்குருவை
  தீர்க்கும் ஆற்றலும், இதற்கு உண்டு
 • நுங்கில் சதை பற்றை மட்டுமின்றி, துவர்ப்பு தன்மையுடைய
  அதன் தோலையும் சேர்த்து உண்ண, அதிலிருக்கும்,
  ‘கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள்’ கிடைக்கும்
 • கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல்
  பிரச்னை மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும்
 • நுங்கு நீர், நார்ச்சத்து அதிகம் உடைய இயற்கை
  உணவென்பதால், சிறந்த மலமிளக்கி. வயிறு மற்றும்
  குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், ‘அல்சர்’
  புண்களை ஆற்றும் திறன் கொண்டது

*வயிற்றில், ‘அட்ரீனலின்’ சுரப்பு அதிகம் ஏற்படும் போது,
குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்னை இருப்போர், அடிக்கடி நுங்கு சாப்பிட்டு
வந்தால், உடலில், ‘ஹார்மோன்’ சுரப்பிகளை சரி செய்து,
அடிக்கடி வாந்தி எடுக்கும் பிரச்னையை போக்கும்

 • பனை மரத்தின் மற்றொரு பரிசு, பதநீர். நுங்கை போன்றே,
  உஷ்ண நோய்களை தடுக்கும் வல்லமை உடையது, பதநீர்.
  தினமும், சுத்தமான பதநீர் அருந்தி வந்தால், அதுவே சிறந்த,
  ‘டானிக்!’ இதில், சுண்ணாம்பு கலந்து குடிப்பதால், உடலுக்கு
  இயற்கையான, ‘கால்ஷியம்’ கிடைக்கிறது

*அதிக ஊட்டச்சத்து நிறைந்தது, பனங்கிழங்கு.
குழந்தைகளுக்கு போஷாக்கை கொடுக்கும். இதில் உள்ள
நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி, குடல் புற்றுநோயை தடுக்கும்.

கற்பக விருட்சம் எனப்படும், பனை மரத்தை நடுவோம்…

வருங்கால சந்ததியினர் வாழ வழி வகுப்போம்!


 • எம்.விக்னேஷ்
  வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: