ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா

ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா 201907091358008107_Actress-Iniya-ready-to-film-production_SECVPF

நடிகை இனியா விரைவில் தனது தயாரிப்பு நிறுவனம் 
மூலம் படங்கள் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் 
கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. தற்போது தமிழ், 
மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 
பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் 
வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் 
சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் 
கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ 
ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. 
‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக 
தயாரித்துள்ளார்.

சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு 
திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, 
எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து 
முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றி
பெற செய்கிறான். 

இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். 
நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக 
இனியா நடித்துள்ளார்.

இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். 
என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் 
ஆடியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாட்டையும் 
நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக 
வெளியிட்டுள்ளேன். 

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
விரைவில் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் 
தயாரிக்க இருக்கிறேன்’

இவ்வாறு அவர் கூறினார்.

—————————-
மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: