‘தமிழக மலையின மக்கள்’ நுாலிலிருந்து:

‘நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்’ வெளியீடு, டாக்டர் கே.ஏ. குணசேகரன்
எழுதிய, ‘தமிழக மலையின மக்கள்’ நுாலிலிருந்து:

நீலகிரி மலைப் பகுதி, ஏழு இடங்களில், கோத்தர் இன
மக்கள் வசிக்கின்றனர். தங்கள் பகுதியை, கோக்கல்
என அழைக்கின்றனர்.

வெண்ணிற துணியை, இரண்டாக மடித்து, உடலை
போர்த்திய நிலையில், ஆண் – பெண் வித்தியாசமின்றி,
அனைவரும், தலைமுடியை செருகி, கொண்டை
போட்டுக் கொள்கின்றனர்.

நீரோடையின் இரு கரைகளிலும் வசிக்கின்றனர்.
இக்கரையில் உள்ளோர், தன் கரையில் பெண் எடுக்க
மாட்டார்கள். மாறாக, அக்கரையில் உள்ளவரை, வேறு
பிரிவாக கருதி, சம்பந்தம் செய்வர்.
இங்கு, முக்கிய சீதனமே, எருமை மாடு தான்.

இவர்களுக்கு, பறவை, விலங்குகள் சார்ந்த நம்பிக்கைகள்
பல உண்டு. உதாரணமாக:

  • கருங்குருவி குறுக்கே போனால், பயணம் செய்வதை
    தவிர்ப்பர்
  • எருமை மாட்டிற்கு நோய் வந்தால், தெய்வ குற்றம் என
    கருதி, தெய்வத்திற்கு பொங்கல் படைப்பர்
  • நிறை குடத்துடன், பெண் எதிரில் வந்தால், காரியம்
    பலிதம்
  • விழாக்களின் போது, காலில் செருப்பு அணிய
    மாட்டார்கள்.

நீலகிரி மலைப் பகுதியில் இருளர்களின் குடியிருப்பு
காணப்படுகிறது. ‘பாம்பு பிடிக்கணுமா, அது பற்றி அறிந்து
கொள்ளணுமா. இருளரை கூப்பிடு…’ என்பர்.

பாம்பு மட்டுமல்ல, விலங்குகளை கண்டு பயப்படாதவர்கள்.
யாருக்காகவும், எதற்காகவும் தங்கள் தன்மானத்தை விட்டுக்
கொடுக்க மாட்டார்கள்.

காதல் திருமணம், இவர்களிடையே சகஜம். பசியால் கதறி
அழும் குழந்தைகளுக்கு, உணவு கொடுக்க முடியாமல்,
உயிருடன் புதைத்த இருளர் பெண்களும் உண்டு.

இவர்களுக்கான தனிமொழி, இருளா; தெய்வம், கன்னியம்மன்.

மாசி மாதம், பவுர்ணமியில் அம்மனுக்கு விழா எடுப்பர்.
வேட்டையாடுவதில் வல்லவர்களான இவர்கள், கூலி
வேலைகளிலும் ஈடுபடுவர். காட்டில் தேன் எடுத்தும் வருவர்.

சங்கீதத்திலும் வல்லவர்கள். நாயனம் போன்ற இசைக்
கருவியை இசைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். விழாக்களின்

போது, பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பர்.


நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: