2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?

india


பரபரப்பாக நடைபெற்று வரும் 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந்துள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கிய 12-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இதில் மொத்தம் 48 ஆட்டங்கள்  ஆடப்படுகின்றன. தற்போது 31-ஆவது ஆட்டம் முடிந்துள்ளது.


பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள அணிகளில் நியூஸிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-ஆவது இடத்திலும், இந்தியா 3-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 4-ஆவது இடத்திலும் புள்ளிகள் பட்டியலில் உள்ளன. அதே நேரம் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், வங்கதேசம், மே.இ.தீவுகள், இலங்கை, உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற தவிப்பில் காணப்படுகின்றன.

வெளியேறும் அணிகள்
அதே நேரத்தில் 7 தோல்விகளுடன் ஆப்கானிஸ்தானும்,  5 தோல்விகளுடன் தென்னாப்பிரிக்காவும் தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுகின்றன. சம்பிரதாயத்துக்காக மேலும்  சில ஆட்டங்களில் இரு அணிகளும் ஆட உள்ளன. 


நியூஸிலாந்து 6 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் சராசரி +1.306 ஆகும். 4
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 வெற்றி, 1 தோல்வி என 10 புள்ளிகளுடன், ரன் சராசரி +0.849  இரண்டாவது இடத்தில் உள்ளது. 
இந்திய அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் ரன் சராசரி +0.809, 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள், ரன் சராசரி +1.457 உடன் 4-ஆவது இடத்தில் உள்ளது. 
வங்கதேசம் 3 வெற்றி, 3 தோல்வி, ரன் சராசரி -0.133 உடன் 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இலங்கை தலா 2 வெற்றி, தோல்வி,, ரன் சராசரி -1.119 என 6-ஆவது இடத்தில் உள்ளது. 


பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்விகள்  5 புள்ளிகளுடன் (ரன் சராசரி (0.190) 7-ஆவது இடத்தில் உள்ளது.
அதே நேரம் மே,இ.தீவுகள் 6 ஆட்டங்களில் 1 வெற்றி, 4 தோல்விகள் 3 புள்ளிகளுடன் (ரன் சராசரி +0.190 ) 8-ஆவது இடத்தில் நீடிக்கிறது.
தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது கானல் நீராக மாறிய நிலையில், இரு அணிகளும் போட்டியில் இருந்தே வெளியேறுகின்றன.

அரையிறுதிக்கு அருகில் நியூஸி, இந்தியா
நியூஸிலாந்து, இந்தியா உள்ளிட்டவை இதுவரை ஒரு தோல்வியைக் கூட பெறவில்லை. 11 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றாலே அரையிறுதிச் சுற்றில் நுழைந்து விடும்.

அதே நேரத்தில் கோலி தலைமையிலான இந்தியா அடுத்து மே.இ.தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுடன் ஆட வேண்டியுள்ளது. 9 புள்ளிகளுடன் உள்ள இந்தியா இன்னும் 2 ஆட்டங்களில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.


அதே போல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் ஆட வேண்டும். ஒரு வெற்றியைப் பெற்றாலே ஆஸி.யும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது.

நான்காவது இடத்துக்கு போட்டி
அதே நேரத்தில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையுடன் பெற்ற தோல்வியால் சிக்கலை சந்தித்துள்ளது. அந்த அணி அடுத்து வலுவான இந்தியா, நியூஸிலாந்தை எதிர்கொள்ள வேண்டும். இரண்டிலும் தோல்வி பெற்றால் இங்கிலாந்தும் போட்டியில் இருந்து வெளியேறும்.

இன்னும் ஒரு வெற்றி பெற்றாலும் இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு நிச்சயமில்லை. இலங்கை அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியுற வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம், இரு ஆட்டங்களிலும், மே.இ.தீவுகள் ஒரு ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கை
6 புள்ளிகளுடன் உள்ள இலங்கை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களில் வென்றால் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இலங்கை அடுத்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகளை எதிர்கொள்கிறது. 3 ஆட்டங்களில் தோற்றால் இலங்கை வெளியேறும்.
10 புள்ளிகளுடன் இருந்தால், இங்கிலாந்து அடுத்த 3 ஆட்டங்களிலும் தோற்க  வேண்டும்.

வங்கதேசம்
மேலும் வங்கதேச அணி அடுத்து ஆட உள்ள ஆப்கன், இந்தியா, பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.  11 புள்ளிகளைப் பெறும் வங்கதேசம், அடுத்து இலங்கை அனைத்து ஆட்டங்களிலும், இங்கிலாந்து 2 தோல்விகளை பெற்றால் அரையிறுதி குறித்து சிந்திக்கலாம்.


மே.இ.தீவுகளோ அடுத்த 3 ஆட்டங்களிலும் வென்று, இங்கிலாந்து 3 ஆட்டங்களிலும் தோல்வி, பாகிஸ்தான் 2 ஆட்டங்களில் தோல்வி, வங்கதேசம், இலங்கை அணிகள் ஓர் ஆட்டத்துக்கு மேல் வெற்றி பெறாமல் இருந்தால் மட்டுமே அரையிறுதி குறித்து ஆலோசிக்க முடியும்.


பாகிஸ்தானோ அடுத்த 3 ஆட்டங்களில் வென்று, இங்கிலாந்து ஒரு வெற்றிக்கு மேல் பெறாமலும், வங்கதேசம், இலங்கை அணிகள் குறைந்தது ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.

நன்றி-தினமணி
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: