நீ இறக்கும்போது அழுபவர் யார்..?

மனித வாழ்க்கையின் முடிவைப் பற்றி
கவலைப்படாத வரை ஆன்மீகம் என்பது
மனிதர்கள் அடைய முடியாத தூரத்தில்
இருப்பதாக தோன்றும். ஆனால் இதுதான்
முடிவு என்று தெரிந்து கொண்டவர்கள் சட்டென
திரும்பி நடக்கும் பாதை கண்டிப்பாக ஆன்மிகப்
பாதையாகத்தான் இருக்கும்.

பகுத்தறிவு பேசிய
எத்தனையோ தலைவர்கள் இன்று ஆன்மிகப்
பாதையை தேடி திரிவதன் காரணமும் இதுதான்.
ராபின் ஷர்மா எழுதியுள்ள Who will cry when
you die? என்ற புத்தகம் கடைசியில் சொல்வது
ஆன்மீகத்தைத்தான்.
அந்த புத்தகத்திலிருந்து சில வரித்துளிகளைக்
காண்போம்.

🌷🧩🌷1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும்
ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை
சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும்
எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

🌷🧩🌷2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை
உள்ளதோ அதிலேயே கவனத்தையும்,
நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக
நேரம் செலவழிக்காதீர்கள்.

🌷🧩🌷3. அடிக்கடி கவலை
படாதீர்கள். தேவை எனில் கவலை
படுவதற்கென ஒவ்வொரு
நாளும் மாலை நேரம் முப்பது
நிமிடம் ஒதுக்குங்கள். அந்த
நேரம் அனைத்து கவலையும்
குறித்து சிந்தியுங்கள்.

🌷🧩🌷4. அதிகாலையில் எழ
பழகுங்கள். வாழ்வில்
வென்ற பலரும் அதி
காலையில் எழுபவர்களே.
🌷🧩🌷மகரயாழ்🌷🧩🌷
🌷🧩🌷5. தினமும் நிறைய
சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்
களையும் பெற்று
தரும்.

🌷🧩🌷6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு
சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு
புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும்
நேரத்தில் வாசியுங்கள்.

🌷🧩🌷7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில்
பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே
உங்கள் மன பாரம் கணிசமாக குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும்
வாய்ப்பு உண்டு.

🌷🧩🌷8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு
கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள்.
அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

🌷🧩🌷9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில
நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு
வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும்
முட்டாளாய் இருக்க நேரிடும்.

🌷🧩🌷10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள்
முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்
கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே
தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப
செய்யுங்கள்.

🌷🧩🌷11. தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும்
தரும்.
🌷🧩🌷மகரயாழ்🌷🧩🌷
🌷🧩🌷12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள்.
அவர்களிடமிருந்து
கூட உங்களை ஒத்த
சிந்தனையும், நல்ல
நட்பும் கிடைக்கலாம்.

🌷🧩🌷13. பணம் உள்ளவர்கள்
பணக்காரர்கள் அல்ல.
மூன்று சிறந்த நண்
பர்களாவது கொண்டவனே
பணக்காரன்.

🌷🧩🌷14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர்
செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக
செய்யுங்கள்.

🌷🧩🌷15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும்
முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை
அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா
விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.

🌷🧩🌷16. உங்கள் தொலை/கை பேசி உங்கள்
வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு
முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும்
என்பதில்லை. முக்கியமான வேளைகளில்
நடுவே இருக்கும் போது தொலைபேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

🌷🧩🌷17. உங்கள் குடும்பத்தின் முக்கிய
நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள்.
பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள்
சென்று வர அவை உதவும்.

🌷🧩🌷18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது
சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி
குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.

🌷🧩🌷19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும்
எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றி
கரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”

படித்ததில் பிடித்தது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: