மயிலில் வள்ளி, தெய்வானை!

மயிலில் வள்ளி, தெய்வானை! E_1559893711

முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும்,
மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம்,
இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை
சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட
தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து,
தோஷம் நீக்கினார், சிவன்.

அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில்,
ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார்.

நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு,
நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற
பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர்
என்றும் பெயர் ஏற்பட்டது.

கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின்
அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை,
சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும்,
விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக
அமைத்துள்ளது விசேஷம்.

முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை

தரிசிக்கலாம்.

இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர்.
அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை,
அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம்
அடைந்தாள்.

இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது
சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக
காட்சி தருகின்றன.

அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது.
இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப்
பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை
மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது.

பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார்.
அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில்
வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக
விசேஷமான காட்சி.

இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க
வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி,
சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார்
. குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர்.
நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன.

மதுரை – தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ.,
இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால்,

இரணியூரை அடையலாம்.


தி. செல்லப்பா
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: