ஒருவனுக்கு ஒருத்தி!

உலகம் முழுவதும், ஏராளமான குருவி இனங்கள் உள்ளன;
அவற்றில் குறிப்பிடத்தக்கது சிட்டுக்குருவி.

‘யுரேஷியன் டிரீ ஸ்பாரோ’ என்று ஒரு வகை சிட்டுக் குருவி
உள்ளது. இவை, காடுகளில் உள்ள மரங்களில் மட்டும் கூடு
கட்டி வசிக்கும்.

‘ஸ்னோ பின்சஸ்’ மற்றும் ‘கிரவுண்ட் ஸ்பாேரா’ போன்றவை,
உயரமான மலைப்பகுதியில் மட்டும் வசிக்கும்.

‘சின்னமன் ஐபான்’ சிட்டுக் குருவி இனங்களில், மிகவும்
அபூர்வமானது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மழை மேக காட்டுப் பகுதியில்
உள்ள, மலை முகடுகளில் வசிக்கின்றன.

குருவி இனங்களின், முக்கிய உணவு, தானியங்கள், சிறிய
விதைகள், நத்தைகளின் முட்டைகள், மிகச் சிறிய கற்கள்
போன்றவை ஆகும்; உணவுகளை கொத்தி தின்னும் வகையில்,
இவற்றின் அலகுகள், கூர்மையாக அமைந்துள்ளன.

தானியங்கள் செரிமானம் ஆவதற்காக, சிறிய கற்களை,
உணவுடன் சேர்த்து தின்கின்றன.

மனிதர்கள் வசிப்பிடங்களில் வாழும் சிட்டுக் குருவிகள்,
உணவு துகள்கள், ரொட்டி துண்டுகள், பழ துண்டுகள்
மற்றும் காய்கறிகள் போன்றவற்றை, விரும்பி உண்ணும்.

சிட்டுக் குருவிகள், முட்டையில் இருந்து வெளியே வந்தவுடன்,
சத்தான உணவு தேவை என்பதால், சிறிய பூச்சிகள், புழுக்கள்
போன்றவற்றை தாய்ப் பறவை ஊட்டும்.

குருவிகள், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்றுவாழும்; பெண்
பறவையை கவரும் வகையில், ஆண் பறவை அழகாக கூடு
கட்டும். அந்த கூட்டின் அழகில் மயங்கிய பெண் பறவை,
ஆண் பறவையுடன் ஜோடி சேரும்.
இந்த கூட்டில், தங்கள் வாழ்நாள் முழுவதும் வசிக்கும்.

பெண் சிட்டுக்குருவி கருத்தரிக்கும் போது, இரண்டு முதல்,
ஆறு முட்டைகள் வரை போடும்; இந்த முட்டைகளை,
பெண் குருவி, 11 முதல், 14 நாட்கள் அடை காக்கும்.

குஞ்சுகளை, 15 நாட்கள் வரை தாய் பறவை பராமரிக்கும்;
அதற்குள் இறகு முளைத்து விட்டால், குஞ்சுகள் பறந்து,
தனியாக சென்று விடும்.

குருவிகள் கூட்டமாக வாழும் தன்மை உள்ளவை.

குருவிகள் தரையில், சிறிய பள்ளம் தோண்டிய பின், அதில்
உருண்டு, புரண்டு மணல் அல்லது துாசிகளை உடலில்
பூசிக் கொள்ளும்; அது போல, இவை, தண்ணீரிலும் குளிப்பது
உண்டு.

நீர் நிலைகளின் கரையில் நின்று, முதலில் தலையையும்,
பின் உடலையும் தண்ணீரில் நனைத்து, குளியல் போடும்.

இரை தேடிய பின், கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில்
அமர்ந்து, இறகுகளை நீவி விட்டுக் கொள்ளும்.

சில நேரங்களில், இவை கூட்டமாக சேர்ந்து ஒலி எழுப்பும்;

இதை, ‘குருவிப்பாடல்’ என்பர்.


  • என்றென்றும் அன்புடன் அங்குராசு.
    சிறுவர் மலர்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: