இரட்டையர் – கவிதை

_103321563_aw040918woschooltwin08

விண்தரையே போர்க்களமாய் மாறிப் போக,
மின்னலிடி இரட்டையர்கள் மோதிக் கொள்ள,
விண்ணெங்கும் கார்மேகம் குளிரும் தென்றல்
மனமுவந்து இரட்டையராய் இணைந்த தாலே,
மண்முழுதும் மழைவீரர் குருதி வெள்ளம்
மண்செழிக்க ஈந்ததுபோல் மாந்த ரிங்கே,
கண்இமைகள் இரட்டையராய் மாந்தர் உண்டு;
கடுகளவும் ஒருமித்த குணங்கள் இல்லை!

இரட்டையராய் இணைந்தேதாம் தாய்வ யிற்றில்
பிறந்தபோதும், இதயமொன்றாய் இருந்த போதும்,
இரட்டையராய் உடலிணைந்து இருந்த போதும்
இருவருக்கும் வேறுவேறாய் குணமி ருக்கும்;
முரண்பலவாய் முகிழ்த்திருக்கும்; வரலாற் றில்தாம்
முரணற்றக் கதைபலவும் உண்டு; ஆனால்,
முரண்பட்ட மாந்தயினம் என்றே பாரில்
இரட்டையர்போல், உண்டுயென உணர்த்தும் காணீர்!

” நெருப்பலைப் பாவலர்” இராம இளங்கோவன்; பெங்களூரு.
By கவிதைமணி |

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: