தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…

“இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்”  – நகுலன்

நகுலன்

நகுலன் தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பை ஆழமாக விதைத்துச் சென்ற ஆளுமை. வாசகர்கள் மட்டுமன்றி எழுத்தாளர்களுக்கும் விருப்பமான கவிஞர், எழுத்தாளர் நகுலன்.

நகுலனின் படைப்புலகம் அக உலகத்தில் அவர் அடைய, அடைய முற்பட்ட தரிசனத்தின் வெளிப்பாடுதான். ஆங்கிலத்தில் தனது பெயரிலேயே படைப்புகளை எழுதியவர், தமிழின் இலக்கிய உலகுக்கு நகுலனாகவே தன்னை அறிமுகம் செய்து கொண்டார். 

பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆங்கிலத்தின் நவீன இலக்கியத்திலும் பெரும் அறிவைப் பெற்றிருந்தார். நகுலன் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நண்பர்களுடனேயே கழித்தார். நகுலனின் மிக நெருக்கமான நண்பர் கா.நா.சு.
 
“ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா 
இந்தச் சாவிலும் 
ஒரு சுகம் உண்டு.”  என்னும் கவிதை முழுக்க முழுக்க அவரது நினைவின் படிமமே. 

நகுலன்

வார்த்தை ஜாலங்கள் இல்லாத நகுலனின் கவிதைகள் உட்பொருளில் அர்த்தம் பொதிந்தவை. அவரது கவிதைகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைக் காட்டக்கூடியது. அவர் டி.கே.துரைசாமியாக சுசிலாவை படைத்திருந்தால் அவரது நினைவில் மட்டுமே சுசீலா இருந்திருப்பாள். ஆனால், அவர் நகுலனாகப் படைத்ததால் சுசீலா இன்னும் பல வாசகர்களின் நினைவில் உயிர்ப்புடனே இருக்கிறாள். ஒரே வாசிப்பில் உள்வாங்க இயலாத கவிதைகளை, நனவோடை தளத்தில் இயற்றியுள்ளார் நகுலன்.   

கவிஞர்

ஒரு கவிதை கவிஞனின் பார்வையை முன் வைப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது வாசகனுக்கு உள்ளுணர்வோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கவிதைகள் மட்டுமன்றி மிகச் சிறந்த  நாவல்களையும் எழுதியவர் நகுலன்.

அவரது `வாக்குமூலம்’ நாவல் முதுமையின் தனிமையின் அகத்துயரை பாசாங்கின்றி பதிவு செய்தது. முதுமையின் காரணமாக வாழ விருப்பமின்றி சாவதற்கு மனு கொடுப்பதும், பாத்திரங்களின் மன ஓட்டமும் கச்சிதமாக அமையப் பெற்றது. 

“எல்லா இலக்கியங்களும் 
நமக்குள் இருப்பதைத் தான் சொல்கின்றன.
புதிதாய் ஒன்றுமே இல்லை”
என்ற அவரது வரிகளுக்கு `வாக்குமூலம்’ நல்லதொரு சாட்சி. அவரது புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு. 

“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்.” நகுலன் அந்தப் பிரதேசத்தில்தான் வாழ்கிறார். 

சோ.விஜயகுமார்
நன்றி-விகடன்


    

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: