சமையல் டிப்ஸ்

✽ பால் புளிக்காமல் இருப்பதற்கு 1 அல்லது 2 ஏலக்காயைப்
பால் காய்ச்சும் போது சேர்க்கவும். இதனால் நீண்ட
நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

✽ சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது
காரம் அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம்.
ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப்
போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம்
சரியாகி விடும்.

✽ கடையில் பிரெஷ்ஷாக வாங்கி வைத்த கத்தரிக்காய்
வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில்
வைத்து மூடினால் காய் வாடாமல் நிறம் மாறாமல் இருக்கும்.

✽ எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில்
போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல்
பாதுகாக்கலாம்.

✽ உப்பு ஜாடியில் எப்போதும் தண்ணீர் வடிகிறதா?
அதனைத் தவிர்க்க சிறு புளித் துண்டை எடுத்து உப்பு
ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்து
விடும்.

✽ அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெய்யில்
ஒரு சில பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் எண்ணெய்
கசடு தங்குவது நிகழாது.

✽ வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன்
கவரில் வைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நீண்ட
நாட்களுக்குக் கெடாது.

✽ வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசையின்
இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும்.
தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு
எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்து சுவையாகவும்
இருக்கும்.

✽ வாழைத்தண்டு, கீரைத்தண்டு மற்றும் கொத்துமல்லி
இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம்
காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

✽ இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில்
வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்
படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

✽ வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை
சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

✽ இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு
மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை
குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக
இருக்கும்.

✽ தோசை மாவு புளித்துப் போனால் அதில் அதிக அள
வு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து
தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை
ஊற்றினால் டேஸ்ட்டாக இருக்கும்.

✽ நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே
எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம்
கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு
எண்ணெய்யை உறிஞ்சும் தன்மை உண்டு.

✽ மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில்
முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம்.

கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத் தூளும் தூவலாம்.

  • வேதவல்லி
    நன்றி-மகளிர்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: