மெஹந்தி சர்க்கஸ் – விமரிசனம்

மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம் 201904191437452283_Mehandi-Circus-Movie-Review-in-Tamil_MEDVPF


மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம் 201904191437452283_1_Mehandi-Circus-Review1._L_styvpf


நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகை சுவேதா திரிபாதி
இயக்குனர் சரவண ராஜேந்திரன்
இசை ஷான் ரோல்டன்
ஓளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்
————

தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் 
மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை 
வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் 
பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு 
இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு 
ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக 
நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. 

சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை 
பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் 
ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை 
கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.

நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் 
ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் 
சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு
ஒரு போட்டி வைக்கிறார். 

இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் 
தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் 
மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது 
வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் 
என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை.

மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம் 201904191437452283_2_Mehandi-Circus-Review4._L_styvpf


மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம் 201904191437452283_3_Mehandi-Circus-Review2._L_styvpf

இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் 
என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். 
சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு 
சென்றிருக்கிறார். 

விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் 
அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து 
ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி 
பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கின்றனர்.

கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் 
விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. 
சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான 
காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் 
சரவண ராஜேந்திரன். 

படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. 
இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்
பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக 
சொல்லியிருக்கிறார்கள்.

எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் 
இசையும் படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்’ இனிமை. 

————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: