சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? Sw2W1N6vSiSfh0hWi72A+சிஎஸ்கே-அணிக்கு-பதிலடி-கொடுக்குமா-பெங்களூரு


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 2 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது சென்னை அணி.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை சென்னை அணி உறுதி செய்து கொள்ள முடியும்.

கடந்த ஆட்டத்தில் முதுகு வலி காரணமாக களமிறங்காத தோனி, இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 230 ரன்கள் சேர்த்துள்ள தோனியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை கருத்தில் கொண்ட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பது தெரிய வரும்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 213 ரன்களை குவித்து பெங்களூரு அணி மிரளச் செய்தது. விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்களும் விளாசி அசத்தினர். பெரிய அளவிலான இலக்கை துரத்திய கொல்கத்தா அணி கடைசி வரை கடுமையாக போராடியது.

கடைசி 6 ஓவரில் வெற்றிக்கு 113 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஆந்த்ரே ரஸ்ஸல், நித்திஷ் ராணா ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது. 19-வது ஓவரை வீசிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 3 பந்துகளை டாட் பாலாக வீசினார்.

மேலும் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மொயின் அலி அபாரமாக பந்து வீசி 13 ரன்களை மட்டுமே வழங்கினார். இந்த ஓவர்கள் தான் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு? G56VcChcRgG01EKlO1Ar+2657d586P2197063mrjpg

இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி, மொயின் அலி, மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் களமிறங்காத டி வில்லியர்ஸ் இன்று களமிறங்கக்கூடும் என தெரிகிறது. டேல் ஸ்டெயின் வருகையால் பெங்களூரு அணியின் பந்து வீச்சு சற்று பலம் அடைந்துள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் பலமே தோனிதான். கடந்த ஆட்டத்தில் அவர் விளையாடாதது ஒட்டுமொத்த அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்தது.

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்கும் பட்சத்தில் அணி புதுத்தெம்பை பெறும். சுழற்பந்து வீச்சில் அசத்தி வரும் 40 வயதான இம்ரன் தகிர், பெங்களூரு அணிக்கு அழுத்தம் தரக்கூடும்.

இந்த சீசனில் 2-வது முறையாக பெங்களூரு அணியை வீழ்த்தும் முனைப்புடன் சென்னை அணி செயல்படக்கூடும். தொடரின் முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 70 ரன்களுக்குள் சுருண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி குழுவினர் பதிலடி தர முயற்சிக்கக்கூடும்.

அணிகள் விவரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, டேல் ஸ்டெயின் காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ்ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

சென்னை சூப்பர் கிங்ஸ் :
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

நன்றி- இந்து தமிழ் திசை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: