போதையின் பாதையில்’ நூலிலிருந்து… –

  "போதையின் பாதையில்'   நூலிலிருந்து... - E_1282385550


புகை பிடிப்பதற்கென்றே மூன்று வழி உபாயங்கள் உண்டு. 
பீடி, சிகரட், பைப். ஒரு விதத்தில் இவை சமுதாயத்தின் 
பொருளாதார அடுக்குகளைப் பொருத்தவை. 

கீழ் அடுக்கில் பீடி, அடுத்தபடியாக சிகரட், மேல் தட்டில் பைப். 
ஆனால், வரலாற்று வழியில் பார்க்கும் போது, இந்த வரிசையில், 
முன், பின் முரண் ஏற்படுகிறது. 

முதன் முதலாக பழக்கம் பெற்றது, பைப். வெள்ளைக்காரர்கள் 
வந்த பிறகு உருவானது சிகரட். பின், “நமக்கு நாமே’ திட்டப்படி, 
நாமே உருவாக்கியது பீடி, முழு சுதேசி. 

நம் நாட்டிலே வளரும் புகையிலை மற்றும், “தூப்பிரா’ இலையில்,
நம் கையாலேயே சுற்றப்பட்ட பொருள் பீடி! அடிப்படை 
இவ்வாறிருக்க, “அவன் பீடி பிடிக்கிறான்…’ என்று குற்றம் சாட்டுவது 
சரி அல்ல; பண்பும் அல்ல. அப்படிச் சொல்பவன் தேசத் துரோகி; 
நாட்டுப்பற்று அற்றவன். சுதந்திர பாரதம், தன் நிறைவுக் 
கொள்கையை கையாள முற்பட்டபோது, கை கொடுத்தது பீடி. 

ஆப்ரிக்க மக்களுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணி 
பெற்றுத் தந்தது. “பீடி’ என்ற சொல், திராவிட மொழிகளிலே 
தற்காலத்தில் வழங்கப்படு கிறதாயினும், அது வடமொழிச் சொல்லே!

வடமொழியில், “பீட்’ என்றால், “சுருள்’ என்று பொருள். இவ்வழியில், 
பீடி, பீடா முதலிய சொற்கள் உருவாயின. பீடி சுற்றுதல், 
ஒரு தனி கலை. தூப்பிரா இலையை ஒரு குறிப்பிட்ட உருவத்திலும், 
அளவிலும் வெட்ட வேண்டும். புகை யிலையின் நடு நரம்பால் 
உண்டான வட்டுப் பொடியை, தூப்பிரா துண்டு மேல் வைத்து 
சுருட்ட வேண்டும். கடைசியாக, நூலால் முடிச்சிட வேண்டும். 
இவ்விதமான பீடி, யந்திரத்தால் தயாரிக்கப்பட்டது போல,
ஒரே அளவு, ஒரே உரு பெற்றுள்ளது. 

தேர்ந்த தொழிலாளி, 
மணியொன்றுக்கு 200 பீடி களைக் கட்டுவார்.

பீடி பிடிக்கும் பழக்கமுள்ளவர், “சிகரட் கெடுதல்; அதில் நிறைய 
நச்சுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன…’ 
என்பர். 

சிகரட் பிடிப்பவர், சுருட்டு பிடிப்பவரை, “பத்தாம் பசலி…’ என்பர். 
இருவரும் சேர்ந்து, “”தூ… பைப் துர்நாற்றம்… பயன்படுத்திய ஒன்றையே
திரும்ப திரும்ப வைத்துக் கொண்டு… சுத்த அநாகரிகம்…’ என்பர். 

பொதுவாக பார்த்தால், எந்தக் கருத்தையும் புறக்கணிக்கலாகாது. 
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம் உண்மை. 
கடவுள் ஒருவன், உருவங்கள் பல என்பதைப் போல!

“பீடி – துர்நாற்றம்!’ என்று, அதைப் பொதுவாகப் புறக்கணிக்கிறோம்
அல்லவா? அந்தக் குற்றம் பீடியைச் சேர்ந்ததல்ல… பொடியைச் 
சுற்றிய தூப்பிரா இலையைச் சேர்ந்தது. புகையிலை நறுமணத்துடன், 
தூப்பிராவின் துர்மணம் போட்டி போடுகிறது. இந்த உண்மையைப் 
புரிந்து கொள்ளாமலே, புகையிலையைப் பழிக்கின்றனர். 

எந்தக் கம்பெனி பீடியானாலும், உட் பொருள் ஒன்றே! 
புகை இழுப்பவன் அரசனானாலும், ஆண்டியானாலும், உணரும் இன்பம் 
ஒன்றே! ஆயினும், சமுதாயம் பீடியை மதித்து ஒப்புக் கொள்வதில்லை. —

“போதையின் பாதையில்’ நூலிலிருந்து…

————————————-
நன்றி-திண்ணை-வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: