இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?



Arunachal_Pradesh_at_Luguthang_-_Mukto_Assembly_1

கடும் இடர்பாடுகளைத் தாண்டி நாட்டின் உச்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அருணாச்சலப் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டிலேயே மிக உயரிய இடத்தில் தேர்தல் நடைபெற்ற பகுதி என்ற பெருமை அம்மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள லுகுதங் – முக்தோ சட்டப்பேரவைத் தொகுதிக்கான லுகுதங்க் கிராமத்தின் வாக்குப்பதிவு 13 ஆயிரத்து 583 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடத்தப்பட்டது. 

கடும் இடர்பாடுகளைத் தாண்டி மக்கள் வாக்களிக்க வசதியாக இங்குள்ள வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று பார்வையிட சுமார் 2 நாட்கள் ஆனதாக தேர்தல் அதிகாரி ஷேய்பாலி ஷரன் தெரிவித்தார். மொத்தம் 7,98,249 வாக்காளர்கள் உள்ள அம்மாநிலத்தில் 2,202 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நன்றி-தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: