அப்பாவின் பாசம்…”..

அன்புடன் Rajesh Rajesh……………………………………….

தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லித் தூங்க வைப்பாள்.

ஆனால் தந்தை அப்படி அல்ல “தான் காணாத உலகையும், தன் மகன் காண வேண்டும் எனத் தோள் மீது அமர வைத்து தூக்கிக் காட்டிக் கொண்டு போவார்.

தாய் துன்பப்படுவதைக் கண்டு பிடித்து விடலாம்.தந்தை துன்பப்படுவதை பிறர் சொல்லித் தான் கண்டு பிடிக்க முடியும்.

நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுகாவலராகத் தெரிகிறார்.

தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தைக் கடத்தி விடுவாள்.அந்த வித்தை தந்தைக்குத் தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.

தன் அப்பாவின் நச்சரிப்பால் மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.

பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,
ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,
பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.இப்படியே சின்னச் சின்ன செயலுக்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

இன்று ஒருவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய் விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்குக் கிளம்பினான்.

கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்குக் கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான்

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்து இருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பது போல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. “நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.

பதற்றத்துடன் அறைக்குள் காலடி வைத்தவன், மிதியடியில் ’WELCOME’ என்ற எழுத்துத்
தலைகீழாக இருந்ததை கவனித்தான்.அதையும் வருத்தத்துடன் அதை காலால் சரி செய்து விட்டு உள்ளே நுழைந்தான்
.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின் பக்கத்தில் பல மின் விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டு இருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்து விட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பி விட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்குத் தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே

நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.“இது நேர்காணலில் கேட்கப்படும்
புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.
கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையைத் தெரிந்து கொள்வது கடினம்.

அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு,கேமரா மூலம்
கண்காணித்தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்து விட்டு உள்ளே வந்தீர்கள்.

நாங்கள் உங்களையே தேர்வு செய்து இருக்கிறோம்” என்றார். அப்பாவின் கண்டிப்பு எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாகத் தணிந்தது.
வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் வீடு திரும்பினான்
மகன்..

ஆம்.,நண்பர்களே..,

அப்பா நமக்காக எது செய்தாலும் சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!

உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலை ஆவதில்லை, வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.

நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை,உளி போன்று வார்த்தைகளால்,
கட்டுப்படுத்துவதால் தான்,

நாம் காலரை தூக்கிக் கொண்டு கண்ணாடி முன் நின்று,
அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.

எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப் படுத்தி விட்டு, இறந்த பின் அழுவதால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை….❤🙏🏻நட்புடன்🌺

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: