தண்ணீர்! – சில மருத்துவ உண்மைகள்!

உடலுக்கு தேவையான நீர் கிடைக்கும் போது, கல்லீரல்,
தன் பணியை செவ்வனே செய்து, நம் உடலில் சேரும்
தேவையில்லாத கொழுப்பை கரைத்து விடும்.

இதனால், சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும்.

சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு போதுமான தண்ணீர்
கிடைக்காத போது, கல்லீரலும் பாதிப்படைகிறது.
இதனால், உடலில் கொழுப்பு தேங்கி, உடல் எடை கூடுகிறது.

முதியவர்கள், இரவில், துாங்குவதற்கு முன், ஒரு டம்ளர்
தண்ணீர் குடித்தால், ரத்த நாளத்தில் அடைப்பு
ஏற்படுவதையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.

எல்லாரும், எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீரை பருக
வேண்டுமா என்றால், இல்லை என்கின்றனர்,
ஆராய்ச்சியாளர்கள். இதய நோய் உள்ளோர், கல்லீரல்
பாதிப்பு உள்ளோர் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர்,
தண்ணீரை அளவாக தான் குடிக்க வேண்டும்.

இதய நோயாளிகள், அதிக நீர் குடிப்பது ஆபத்தானது.
அதிக அளவில் குடிக்கும் நீர், இதயத்திற்கு திடீர் பளுவை
தந்து, ரத்த பம்பிங் ஆற்றலை பாதிக்கிறது, என்கின்றனர்.

உலகிலேயே மிக விலை உயர்ந்தது, ‘கோல்டன் சி’ எனும்
தண்ணீர் தான்.

ஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின்,
சாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதிகளிலிருந்து,
அரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும்
நீரை சுத்திகரித்து விற்கின்றனர்.

மருத்துவ குணம் உடைய இந்நீர், எடை மற்றும் ஜீரண
சக்தியை அதிகரிக்க பயன்படுவதாக கூறுகின்றனர்.

———————-
– கோவீ.ராஜேந்திரன்
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: