அக்கா மடம், & தங்கச்சி மடம்

ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’
எனும் நுாலிலிருந்து:

ராமேஸ்வரத்தில் உள்ள ராமலிங்க சுவாமியை வழிபடுவதற்கு,
பாரத தேசமெங்கிலும் இருந்து வருகிற பக்தர்களை
பாதுகாக்கும் பொறுப்பை, சேதுபதி மன்னர்கள் ஏற்றனர்.

பயணியரை, திருடர்கள் துன்புறுத்தாமல் காத்து நின்றதுடன்,
அவர்களின் யாத்திரை எளிதாக நிறைவேறவும், துணை
நின்றனர், சேதுபதிகள். அக்காலத்தில், சேது சீமையை ஆண்டு
வந்த, திருவுடையார் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதிக்கு,
இரண்டு பெண்கள் இருந்தனர்.

அவர்கள் இருவரையும் மணந்த மருமகனை, பாம்பனில்
ஆளுனராக நியமித்தார், சேதுபதி. மருமகனோ,
ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரிகர்களிடம், வரி என்ற பெயரில்
பணம் பிடுங்கினார். விஷயம், சேதுபதிக்கு எட்டியது.

மருமகன் என்றும் பாராமல், அவருக்கு, மரண தண்டனை
விதித்தார். அவருடைய மனைவியரான, சேதுபதியின்
புதல்விகளான இருவரும், கணவருடன் உடன்கட்டை ஏறினர்.

இப்பெண்களின் நினைவாக, இரண்டு சத்திரங்களை கட்டினார்,
சேதுபதி. அதையொட்டி இரண்டு ஊர்கள் உருவாயின.
அவையே, அக்கா மடம், தங்கச்சி மடம் என்று, இன்றும்

அழைக்கப்படுகிறது.


நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: