மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,
ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான்.
உனது விழிப்புணர்வு.

 வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல.
மனித மனங்களை தவிர.

 வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்.
வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

 நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.

 வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது
எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால்
இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்து
விடும்.

 வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல.
வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

 கொடுப்பவனாக இரு.
உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.

 அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும்.
வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்,
பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

 இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும்
விட்டுவிடமுடியும்
ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

 தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்க
வேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை
அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.

 ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்.
அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

 எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை
ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும்,
ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்
கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்து
விடும்.

 உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார்.
நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.

 நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது
ஒரு விஷயமே அல்ல.
நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

 இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது,
இந்த கணம் மட்டுமே உள்ளது
நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.

 ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்து
விடுகிறது.

 உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது

உனது உடல் சொல்வதை கவனி.

————————————

படித்ததில் பிடித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: