பார்வை ஒன்றே போதுமே!

முருகன் கோயில்கள் க்கான பட முடிவு
பார்வை ஒன்றே போதுமே!

‘பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை
நீ பார்த்தாலே போதும்’ ‘பன்னிரண்டு கண்களிலே
ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும்
இன்பஒளி உண்டாகும்’ என்றெல்லாம்
கவிஞர்கள் முருகனை போற்றியுள்ளனர்.

இந்த வரிகளுக்கு ஆதாரமானவர் யார் தெரியுமா?
ஆதிசங்கரர்! இவர் உடல்நலம் குன்றியபோது முருகன்
மீது சுப்பிரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம்
பாடினார்.

அதில் ஒரு ஸ்லோகத்தில், “இரக்கமுள்ள ஆறுமுகனே!
உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை பொழியும்
பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறைகள் போக்க
நீ அத்தனை கண்களாலும் பார்க்கத் தேவையில்லை.

ஒருவிழியால் பார்த்தால் போதும்.. அப்படி பார்ப்பதால்
உனக்கு என்ன குறை நேரப் போகிறது?” எனக் கேட்டார்.

-தினமலர்

 

பின்னூட்டமொன்றை இடுக