உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம் எது?

நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக
இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே,
இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள
செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும்
‘கலிபோர்னியா பிக்’ (பெரிய) மரங்களே அவை.

இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை.

சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா
பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட
பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம்
கொண்டிருக்கிறது.

அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக
உள்ளன. எடை 2,145 டன்! இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து
500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா
மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன.
இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே
காணப்படுகிறது.

இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும்
முன்பு தோன்றியவை!

————————————
க.விண்மணி, 9ம் வகுப்பு,
முத்தாரம் 04 Aug 2014

படம்- இணையம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: