* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
– புத்தர்
–
—————————————–
* மனம் அமைதியாக இருப்பதற்குக்குச் சமமான
உறவு இல்லை,
சத்தியத்தைவிட உயர்ந்த தவம் இல்லை.
முக்தியைவிட மிகப் பெரிய இலாபம் இல்லை.
கங்கைக்குச் சமமான வேறு ஒரு நதியே கிடையாது.
– சனக மகாமுனிவர்
–
———————————————-
* எவன் சுயநலத்தைத் தியாகம் செய்கிறானோ, எவனுக்குப்
பொறாமையும் கர்வமும் இல்லையோ, எவன் அன்பாகவும்
பணிவாகவும் இனிமையாகவும் பேசுகிறானோ,
எவனுக்கு இந்த உலக சுகபோகங்களில் ஆசை இல்லையோ,
அவனே ஸ்ரீ ராமபிரானின் உண்மையான ஊழியன்.
– சமர்த்த ராமதாஸ்
–
——————————————
* கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை, பெற்ற தாய்க்குச்
சமமான குரு இல்லை. பகவான் விஷ்ணுவிற்குச் சமமான
கடவுள் இல்லை.
அதேபோல் குருவைவிடச் சிறந்த தத்துவம் கிடையாது.
– சனக மகாமுனிவர்
–
———————————————–
* கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு
முயற்சி செய்தாலும்கூட, அவன் கிருதயுகத்தில் பெரும் தவம்
செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ அவ்வளவு
புண்ணியத்தை எளிதில் அடைவான்.
– பராசர முனிவர்
–
——————————————
By தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
நன்றி-வெள்ளிமணி
மறுமொழியொன்றை இடுங்கள்