‘கண்டுபிடிப்புகளின் கதை’ என்ற நுாலிலிருந்து:

குடைகள், 3,000 ஆண்டுகளாகவே நம்மிடையே புழக்கத்தில்
இருந்து வருகிறது. சுமார், 100 ஆண்டுகளுக்கு முன் வரை
தாழங் குடைகளை பயன்படுத்தி வந்தனர், முன்னோர்.

வெள்ளைக்காரன் வந்த பின், மடக்கும் வசதி கொண்ட
குடைகளை அறிமுகம் செய்தனர்.

இந்தியாவை ஆண்ட அரசர்கள், வெண் கொற்றக் குடையின்
கீழ் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தனர்.

‘சத்ர’ என்றால் குடை. அதனாலேயே, மன்னர்களுக்கு,
சத்ரபதி என்று பெயர். பேரரசருக்கு தான் குடை மரியாதை
உண்டு. கப்பம் கட்டும் சிற்றரசர்களுக்கு, குடை உரிமை
கிடையாது.

மதத் தலைவர்கள், குடையின் கீழ் அமர்ந்து நிர்வாகம்
செய்து வந்தனர். இன்றும், ஆதீன தலைவர்களுக்கு, தங்கள்
இருப்பிடத்திலிருந்து வெளியே வரும்போது, அவர்களுக்கு
பல வண்ண வேலைப்பாடமைந்த குடை பிடிக்கப்படுகிறது.

பிள்ளையார் குடை, திருப்பதி உற்சவர் உலா குடை,
பெருமாள் கோவில் சுவாமி புறப்பாடு குடை என,
கடவுளர்களுக்கும் குடை பிடிக்கப்படுகிறது.

சமண மத சிலைகள், அதன் தலைக்கு மேலே மூன்று அடுக்கு
குடைகளை கொண்டுள்ளன.

இன்றும், சமயச் சடங்குக்காக, போப்பாண்டவர் ஊர்வலம்
செல்லும்போது, அவரின் தலைக்கு மேல் இரண்டு குடைகள்
பிடிக்கப்படுகின்றன.

ஒன்று, அவரது இவ்வுலக அதிகாரத்தை குறிப்பதாகவும்,
உள்ளடக்கமாக இருக்கும் குடை, ஆன்மிக சக்தியை
குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆங்கிலத்தில், ‘அம்ப்ரல்லா’ என்ற சொல், ‘நிழல்’ என்பதை
குறிக்கும். இருப்பினும், குடையை முதன் முதலில் கண்டு
பிடித்தவர்கள் சீனர்கள்!

ஆதிவாசிகள் சிலர், குடை போன்ற பெரிய தொப்பியை
அணிந்து வெயிலிலிருந்து தற்காத்துக் கொண்டனர்.
இதுவே, பின், ‘கவ்பாய் குல்லா’ ஆயிற்று.

முதன் முதலில், மடக்கும் வகைக் குடைகள், பிரான்ஸ்
நாட்டில், 17ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்பு, ‘சிலிக்கான்’ திரவம் பூசப்பட்ட துணிகளால், குடைகள்
தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, அது மறைந்து,
நைலான் குடைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

மூன்றாக மடக்கி, சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும்
விதமாக மடக்கு குடைகளும் வந்து விட்டன.

ஜப்பானில், பெண்கள், அழகுக்காக பிடித்துச் செல்லும்
குடைகள், காகிதத்தால் ஆனவை!

———————————

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: