சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும் மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.

சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- “வசூல் ராஜா MBBS” இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது) சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது.
அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்களே.

🌺சிரிப்பின் வகைகள்

அசட்டு சிரிப்பு
ஆணவ சிரிப்பு
ஏளனச் சிரிப்பு
சாககச் சிரிப்பு
நையாண்டி சிரிப்பு
புன் சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
மழலை சிரிப்பு
நகைச்சுவை சிரிப்பு
அச்சிதல் சிரிப்பு
தெய்வீகச் சிரிப்பு
புருவச் சிரிப்பு
காதல் சிரிப்பு
வில்லங்க சிரிப்பு
ஏழையின் சிரிப்பு

😝சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

*உதட்டின் மூலமாக சிரித்தல்
*பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
*பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக சிரித்தல்

சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

அன்பு

மகிழ்ச்சி

அகம்பாவம்

செருக்கு

இறுமாப்பு

தற்பெருமை

அவமதிப்பு

புறக்கனிப்பு

வெறுப்பு

🌺🌺சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

@வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
@கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
@துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
@மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
@விளையாமல் சிரிப்பவன் வீணன்.
@இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
@மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
@மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
@கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
@ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
@தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
@நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
@ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
@கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
@கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
@இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
@நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
@தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
@இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
@குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
@நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
@அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
@தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.
@சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
@நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
@காதலால் சிரிப்பவள் மனைவி.
@அன்பால் சிரிப்பவள் அன்னை.

😝😝சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

-முகநூலில் ரசித்தவை

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: