தேவையான பொருட்கள்:
–
ராகி சேமியா — 1 கப்
பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பட்டை – 1
ஏலக்காய், கிராம்பு – 2
கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி
எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,
புதினா – தேவையான அளவு.
–
செய்முறை:
–
வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய்,
கிராம்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி,
அதில், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி,
மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள்,
தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட்,
உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்கவும்;
பின், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு
கப் நீர் ஊற்றவும்.
நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி,
அடுப்பை, ‘சிம்’மில் வைத்து, கொத்தமல்லி தழை
துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார்.
சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சாப்பிடாத
குழந்தைகளும், இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்;
இரும்புச் சத்து அதிகம் உள்ள ராகியை, பிரியாணியாக
செய்து சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.
–
——————————-
– ஆர்.நுார்ஜஹான், கடலுார்.
சிறுவர் மலர்
மறுமொழியொன்றை இடுங்கள்