படிப்பின் தாகம்

அப்பாவின் மூக்குக் கண்ணாடி
அவர் இல்லாதபோதும் சொல்கிறது
படிப்பின் தாகம்

————————-

சுவற்றில் ஆணிகள்
சொல்லாமல் சொல்கிறது
அடியின் வலி

———————-

விழுந்து கிடக்கிறான்
உழைக்கும் தொழிலாளி
சனிக்கிழமை இரவு

———————

மரம் இருந்த சுவடு
காலில் இடறும்
கல்லறைச் சிலுவை

——————-

சுமை தாங்கிக்கல்லில்
இளைப்பாறும் காகங்கள்
உடலே சுமையாக

———————

அருணாசல சிவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: