நவராத்திரி கொலு டிப்ஸ்!

கொலு யோசனைகள் க்கான பட முடிவு

• விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி
மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச்
செய்து பூஜை நடத்துவார்கள்.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள்
விலகி ஓடி விடும்.

• ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற
தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை
செய்தபலன் கிடைக்கும்.

• விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி
வழிபட வேண்டும்.
இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

• நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில்
அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

• நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ
நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய
பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம்
போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான்
கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப
ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு
பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே
உருவாகும்.

• ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க,
நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே
அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.

நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை
தேர்ந்தெடுப்பது கூடாது.

• தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக,
பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம்,
வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக
அளிக்க வேண்டும்.

• தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு
செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில்
தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

• கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை
பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி
விழாவின் முக்கிய அம்சமாகும்.

• சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை
சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள்
கொடுக்கலாம்.

• நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத்
திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய
துன்பங்களைத் தடுக்கும்.

• நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம்
செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

• நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் ப
டுத்து தூங்க வேண்டும்.

• அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி
நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட
வேண்டும்.

• நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால்
அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

• நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி
பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

• கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக
கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப்
பலன்களும் கிடைக்கும்.

• நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல்,
உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல்
பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம்
தெரியவில்லையா? கவலை படாதீர்கள்

“ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம’ என்பதை 108 தடவை
சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

———————————
– கவிதாபாலாஜிகணேஷ்
மகளிர் மணி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: