கொலு யோசனைகள்!- ஆர். ராமலட்சுமி

KOLU

• கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று
அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும்.
படிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு
தெய்வாம்சம் வந்துவிடும்.

அதனால் வைத்தபின் எடுப்பதோ, இடம் மாற்றி வைப்பதோ
கூடாது.

• கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர்
நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி
பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.

• கொலுப் படிகளின் பின்புறமுள்ள சுவரில் அழகான
பெரிய பளபளக்கும் சுவாமி படங்களை மாட்டினால்
தெய்வீகம் கமழும்.

• கொலுப் படிகளின் அடியில் தினமும் அழகான
வண்ணக்கோலங்கள் போட்டால் அழகும் தெய்வீகமும்
இணைந்திருக்கும்.

• தரையில் ஒரு விரிப்பைப் போட்டு அதில் மணல்
பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது
சுலபம்.

• குழிவான தட்டுகள், கிண்ணங்களில் நீர் நிரப்பி
சிறு குளங்களை உருவாக்கலாம்.

• கொலு முடிந்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து
வைக்கும்போது அவற்றை பருத்தித் துணி அல்லது
செய்தித் தாள்களில் சுற்றி வைக்க வேண்டும்.

• பாலியெஸ்டர் உடைகள் அல்லது பாலிதீன் கவர்களில்
வைத்தால் காற்றோட்டமின்றி பொம்மைகளின் நிறம்
மங்கி விடும்.

• கொலு வைத்துள்ள அறையில் ஜிகினாத்தாள்களை
மாலைகளாக தொங்கவிட்டால் அறையே பளபளக்கும்.

————————–
– ஆர். ராமலட்சுமி
மகளிர் மணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: