நீங்கள் சுவாசிக்கும் காற்று இப்போ பாட்டிலில்… 130 முறை மூச்சிழுக்க இவ்வளவு காசா?

DomRSUjU4AAhckO.jpg

இன்னும் கொஞ்ச நாள் போனால் சுவாசிக்கும் காற்று கூட
பாட்டிலில் வாங்க வேண்டும்’ என்று கூறிய வார்த்தைகள்
இப்போது உண்மையாகிவிட்டதே.

உலகத்தில் ஒவ்வொரு நாடும் வளர்ச்சி என்ற பெயரால்
இயற்கையை அழித்து தொழில்நுட்பத்தை வளர்க்க
பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

காடு, மலை, ஏரி என பலவற்றை அழித்து இங்கே கான்கிரீட்
காடுகளை உருவாக்கி வருகிறோம்.

சுவாசிக்கும் காற்று பாட்டிலில் விற்பனை :

அதன் விளைவாக, மரங்களின் எண்ணிக்கை
குறைந்துள்ளது. இதனால் அருந்தும் நீரில் இருந்து
சுவாசிக்கும் காற்றையும் உட்பட அனைத்துமே
மாசடைந்துள்ளது.

எனவே இந்த சூழலை பயன்படுத்தி அறியவகை வியாபாரம்
ஒன்றில் இறங்கியுள்ளது ஒரு இணையதளம்.

நியூசிலாந்தில் இயங்கி வரும் கிவியானா என்ற
இணையதளம், சமூகவலைத்தளத்தில் சுவாசிக்கும் காற்றை
பாட்டிலில் விற்பனை செய்து வருகிறது

.அந்த இணையதளத்தில், “சுத்தமான சுவாசிக்கும் காற்று,
3 பாட்டில்கள் 1400 ரூபாய்” என்று விற்பனை
செய்கின்றனர்.
அதாவது 5.0 லிட்டர் பாட்டிலில் சுத்தமான நியூசிலாந்து
காற்று அடைக்கப்பட்டு விற்பனையாகிறது. ஒ

ரு பாட்டிலுக்கு சுமார் 130 முதல் 140 வரையிலான ஆழமான
மூச்சு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பார்த்த மக்கள், உலகம் இயற்கையான விஷயங்களை
இழந்து வருவதாகவும், ஒரு மோசமான கனவு உண்மையாவது
போல் உணர்வதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

———————————
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்- தமிழ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: