திரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்…

Oct 10, 2018

சிலர் பேசுவதை கேட்டால் சிரிரிப்பு வரும்.. சிலர் செய்யும் செயலை பார்த்தால் சிரிப்பு வரும். ஆனால் திரை உலகில் ஒருவரை பார்த்தாலே சிரிப்பு வரும் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு வைத்தான்.

ஒரு மனிதனால் எப்படி இத்தனை உள்ளங்களையும் கொள்ளையடித்திருக்க முடியும் என்று பலராலும் பொறாமை பட வைத்திருக்கிறார் இந்த மகா கலைஞன்.

ஒல்லியான உருவம், தமிழர்களுக்கே உரிதான நிறம், எத்துப்பல் என்று பலரும் கிண்டலடிக்கும் தோற்றத்தில் இருந்த வடிவேலு தான், நாளடைவில் அஜித், விஜய் போன்ற ஆன்ஸம் ஹீரோக்களையும் அசால்ட்டாக கலாய்த்து கைத்தட்டல்களை அள்ளினார்.

இவருடன் நடிக்கும் போதுதான் எங்களையே அறியாமல் டேக்கில் சிரித்து விடுமோம் என்று எத்தனையோ மேடைகளில் ரஜினி, விஜய், அஜித் போன்ற பலரும் கூறியுள்ளனர்.

1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கி என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் , எண்ணற்ற 400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சிறந்த துணை நடிகரகாவும், ஏன் நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவை ஒருகை பார்த்துள்ளார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது வசனங்களால், பஞ்ச் டயலாக்கால் (வடிவேலு ஸ்டைல் பஞ்ச்) சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிக்ப்போட்டு வைத்திருந்தவர், இன்று மீம்ஸ்களால் சமுஇகவலைத்தளங்களை திணற வைத்துக் கொண்டு இருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் இவரு இல்லை.. இவரு இல்லாமல் ஒட்டு மொத்த சோஷியக் மீடியாவுமே இல்லை என்றால் அது மிகையல்ல. இப்படி ஒரு கலைஞர் சினிமாவில் இப்போது எங்கே? என்றால் கேள்விகளுக்கு பதில் இல்லை. இப்படியொரு கலைஞனை மீண்டும் திரையில் பார்த்திட மாட்டோமா என்று ஏங்காத நெஞ்சங்களே இல்லை.

சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் தளபதி விஜய்யின் இண்ட்ரோவுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் , பறந்த விசில்கள் அப்படியே வடிவேலுவின் இண்ட்ரோவிற்கும் கிடைத்தது என்பதை தியேட்டர்களுக்கு சென்றவர்கள் நன்கு அறிவார்கள்.

பள்ளியில் படித்த அனுபவம் என்பது வடிவேலுக்கு கிடையாது. அந்த காரணத்தினால் தான் சொந்த நண்பர்களே தன்னை ஏமாற்றி விட்டதாக செய்தியாளர்ளிடம் கண்ணீருடன் வடிவேலு கதறி இருக்கிறார்.

‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய வடிவேலுக்கு . 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம்.

இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் வெளியான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.

 

சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

இவரது நகைச்சுவை வசனங்களான “ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா”, “வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா” மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற “மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு” போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது. வடிவேலுவின் பிறந்த நாளான இன்று இந்த சிறப்பு பகிர்வை அவரின் ரசிகர்களுக்காக..

சினிமாவில் பட்டையை கிளப்பிய வடிவேலுவின் தாருமாறான வசங்கள் இதோ உங்கள் பார்வைக்கு..

‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’

‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’

‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க

‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’

‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’


எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’

‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’

‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’

‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’

‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

த்ரிஷா இல்லனா திவ்யா’

‘லேடன் கிட்ட பேசுறீயா பில்லேடன்’

——————————–
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ் – தமிழ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: