–
அதிசய கிளி ஒன்று ஏலத்தில் விடப்படுவதாக
வந்த விளம்பரத்தைக் பார்த்து அந்தக் கிளியை
எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற
ஆர்வத்தில் ஒருவர் ஏலத்திற்கு சென்றார்.
–
யாரையும் பார்க்காமல் ஏலத்தை கேட்டார்.
அவர் கேட்கக் கேட்க யாரோ அவரை விட
அதிகமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இவரும் விடுவதாக இல்லை. கடைசியாக
மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தார்.
–
ஏலம் எடுக்கும் போது கிளியின்
உரிமையாளரிடம் கேட்டார், ‘கிளி கதைக்குமா?’
–
உரிமையாளர் சொன்னார், ‘கதைக்க மட்டுமென்னங்க,
10 இலட்சம் வரை நம்பர் சொல்லத் தெரியும்’
–
‘ஏன் 10 இலட்சத்துக்கு மேல சொல்லிக் குடுக்கேல?’
விசாரித்தார் வாங்கியவர்.
–
கிளி உரிமையாளர் சொன்னார், ‘இதுக்கு மேல
சொல்லிக்குடுத்தா நீங்க ஏலம் கேக்க கேக்க கிளி
தொடர்ந்து கூடக் கேட்டுக் கொண்டு இருந்தா
நான் எப்பிடிங்க ஏலத்த முடிக்கிறது?’
–
(சிரிப்பு வராட்டி திரும்ப வாசியுங்கோ…
அதுக்குப் பிறகும் விளங்காட்டி கண்ண மூடிற்று
கொஞ்சம் யோசியுங்கோ… உங்கட முட்டாள்
தனத்த நினைக்க தானா சிரிப்பு வரும்…)
அதிசய பேசும் கிளி…!
ஒக்ரோபர் 7, 2018 இல் 10:21 பிப (நகைச்சுவை)
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்