முரண்பாடு – கவிதை


அறுபது வயதில்
மனைவி மரணமடைந்ததால்
மறுமணம் செய்பவனை
சமூகம் வாழ்த்தியது

இருபது வயதில்
கணவனை இழந்தவள்
மறுமணம் செய்ததை
கலசாரக் காரணம் காட்டி
சமூகம் தூற்றியது!

கனக கு.ராமசாமி

—————————-

உன்னை செல்லமாய் கொஞ்சி
அழைப்பதால்
நீ என்
செல்லமாகிவிடவில்லை
நீ செல்லுமிடமெல்லாம்
என் நினைவுகள்
சுழல்வதால்தான் நீ என்
செல்லமாகிவிட்டாய்!

முனைவென்றி நா.சுரேஷ்குமார்

——————-

முகூர்த்த தினங்களில்
நகைகடை
ஜவுளி கடைகளில் மட்டுமல்ல
அடகு கடைகளிலும்
கூட்டம் நிரம்பி
இருக்கத்தான் செய்கிறது

சங்கீத சரவணன்

—————————

நீராதாரத்தைப்
பெருக்காமல்
நாம் வாழும்
இக்காலத்திலேயே
நீராகாரம் கூட
கிடைக்காமல்
போகலாம்!

மா.மாரிமுத்து

—————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: