வாழ்க்கையின் தூரங்கள்: கே. அசோகன்

கருவறையை தாண்டித்தான் வெளி வந்து
கண்விழித்தே உலகத்தை காணும் முன்பே
உருவமது பெண்ணாகி போன தனால்
ஒப்பாரி வைப்பதும் உடனுக் குடனே
கருணையின்றி அழித்திட்டே அடுத்த வேலை
கவனிக்கும் சமுதாயத்தின் கசடாக இருந்து
உருவங்களாய் உலவுகின்ற உள்ளத்தின் கோடியிலே
ஒதுங்கியே நிற்குதுபார் வாழ்க்கையின் தூரங்கள்

வைகறை பொழுதினில் புறப்பட்டே சென்று
வல்லூறுகளின் பார்வையிலே தப்பி போய்
கையறு நிலையாய் பேருந்தில் இடிபாடுகளில்
கசங்கிடும் பெண்களின் நிலைதான் அந்தோ
வயிற்றுக்குதான் இந்தபாடு என்றே நினைத்தே
வாய்பேசா ஊமைகளாய் காலந் தள்ளி
கயிற்றின்மேல் நடப்பதென வாழ்ந்து வரும்
கன்னியர்தம் வாழ்க்கையே தூரமோ தூரங்கள்

விழிகள் தன்னிலே கவலையை தேக்கி
காலமெலாம் காத்துநின்றும் வரன் கிட்டா
மொழிபேசா ஊமையாய் உள்ளத்துள் புழுங்கி
மோகமெனும் முள்தைத்தே முழுவது மாய்
அழகொழிந்து அங்குமிங்கும் அலைக் கழிந்தே
ஆடிக்காற்றில் பறக்கின்ற சிறுதுரும் பாய்
வீழ்ந்தேவீணாக உளமுடைந்து கண்ணீர் மல்கும்
விரகத்தின் முதிர்கன்னி வாழ்க்கையே தூரங்கள்

ஏர்தூக்கி உழவுசெய்தும் உடலுழைப்பே மிஞ்சி
ஏதுமில்லை என்றேதான் கைவிரித்து காட்டி
பாருங்கள் எம்நிலைமை என்றே இயம்பும்
பாங்கான உழவர்களின் வாழ்க்கையே தூரங்கள்
சீராகவே தொழிலாற்றி சேர்த்து வைத்த
செல்வத்தையும் அதனில் இட்டே என்றும்
நேர்வழியில் சென்றிடும் வணிகர்தாம் ஏற்றிடும்
நெடுந்தொல்லை ஏராளம் வாழ்க்கையே தூரங்கள்

நெல்விளையும் பூமியெல்லாம் நீரின்றி தரிசாய்
நின்றதனால் அதனையே கட்டாந் தரையென
சொல்லியே மனைகளாய் பிரித்தே விற்றால்
சோற்றுக்கு பஞ்சம்தான் வாழ்க்கையின் தூரங்கள்
புல்லும்தான் விளையாத பூமிதன்னில் தேடியே
போகின்ற கால்நடைகள் பசியையும் போக்கி
அல்லும்பகலும் அயராது உழைத்தும் ஏதுமின்றி
அல்லாடும் மக்களின் வாழ்க்கையே தூரங்கள்

———————————–
நன்றி-கவிதைமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: