கிச்சன் டிப்ஸ் – குங்குமம் தோழி

* மில்க் கிரீமிலிருந்து வெண்ணெயை பிரித்து எடுத்த
பிறகு எஞ்சியிருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு
பாலை சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான
பனீர் கிடைக்கும்.

* பச்சை பட்டாணிகளை வேக வைக்கும்போது
சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல்
இருக்கும்.

* தேங்காய்பால் எடுத்து உணவு தயாரிக்கும்போது
பிழிந்து வைத்த தேங்காய்பால் திரிந்து போகாமல்
இருக்க சிறிதளவு தண்ணீரில் மக்காச்சோள மாவை
கலக்கி அதில் ஊற்றி வையுங்கள்.

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

—————————————

கோதுமையுடன் சமஅளவு அரிசி, கேழ்வரகு சேர்த்து
அரைத்து அடை செய்தாலும், களி செய்தாலும்
சுவையாக இருக்கும்.

* கற்பூரவல்லி இலைகளை பருப்புடன் சேர்த்து
கடைந்து சாம்பார் செய்தாலும் சுவையாக இருக்கும்.

– சு.கண்ணகி, மிட்டூர்.

—————————————–

* பெருங்காயம் கட்டியாகி விட்டதா…?
அதில் இரண்டு பச்சைமிளகாயை போட்டு வையுங்கள்.
இளகிவிடும்.

* மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய்
விட்டால் பூச்சிகள் வராது.
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.


– எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

—————————————–

* மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால்
ஒரு கொதியில் வெந்து விடும். சுவையும் நன்றாக
இருக்கும்.

* இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் வாடாமல்,
வதங்காமல் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

– க.நாகமுத்து, திண்டுக்கல்.

—————————————

* லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து
வெட்டினால் கண்கள் எரியாது. நாற்றம் அடிக்காது.

– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

———————————-

* பனீரைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தபிறகு
பயன்படுத்த எடுக்கும்போது பனீர் மிகவும் கெட்டியாக
இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக் கூடாது.

ஒரு ‘கப்’பில் தண்ணீர் எடுத்து அதில் பனீரை
வெட்டாமல் முழுதாகப் போட்டு 5 நிமிடம் சென்றதும்
எடுத்து பயன்படுத்தினால் பனீர் மிருதுவாக இருக்கும்.

– எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

—————————————

* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்
தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும்.
அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப்
பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள்.
ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
—-

* தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான
நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அடுப்பில்
இருந்து சாஸை இறக்கிய பின்பு தான் உப்பு சேர்க்க
வேண்டும்.

* இன்ஸ்டன்ட் குலோப்ஜாமூன் மாவு வாங்கி தயாரிக்கும்
போது மாவில் சிறிதளவு வெண்ணெய் சேருங்கள்.
குலோப்ஜாமூன் அதிக மென்மையாக இருக்கும்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

—————————————–

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: