ஜோசப் புலிட்சர்! – உண்டாக்கிய அறக்கட்டளை

‘அறிந்து கொள்வோமே!’ என்ற நுாலிலிருந்து:

பத்திரிகை தொழிலில் சிறப்பாக பணியாற்றிய
சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும், ‘புலிட்சர்’ பரிசு
வழங்கப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து வழங்கப்படும் பரிசு இது.
இந்த பரிசை ஏற்படுத்தியவர், ஐரோப்பிய கண்டத்தின்,
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, ஜோசப் புலிட்சர்!

கடந்த, 1864ல், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான
லண்டனுக்கு வந்த, 17 வயது இளைஞரான ஜோசப் புலிட்சர்,
பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர முயன்றார். அதற்கு ஏற்ற
உடற்கட்டும், பார்வைத் திறனும் இல்லாததால், முதலில்
நிராகரிக்கப்பட்டார்.

பின், அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த
யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய, ஏஜன்டின்,
சிபாரிசால், ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவ சேவையில்
ஈடுபட்ட பின், அமெரிக்காவின், மிசோரி – இல்லினாய்ஸ்
மாநிலங்களுக்கு இடையேயுள்ள செயின்ட் லுாயிக்கு
சென்று, சாதாரண வேலைகளை செய்து பிழைத்தார்.

மூன்று ஆண்டுக்கு பின், ஜெர்மானிய பத்திரிகை
ஒன்றின் நிருபராக சேர்ந்தார். தன், 24வது வயதில்
அப்பத்திரிகையின் உரிமையாளர்களில் ஒருவராகி
விட்டார்.

அத்துடன், நஷ்டத்தில் நின்றுவிடும் தருவாயில் இருந்த
வேறொரு பத்திரிகையை குறைந்த விலைக்கு வாங்கி,
அதை, தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு விற்று,
அதன்மூலம், நிறைய சம்பாதித்தார்.

பின், அவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. சரியாக
நடத்தப்படாமல் இருந்த இரு ஆங்கில நாளிதழ்களை
விலைக்கு வாங்கி, இரண்டையும் ஒன்றாக இணைத்து
, ‘செயின்ட் லுாயி போஸ்ட் டெஸ்பாட்ச்’ என்ற சக்தி
மிகுந்த பத்திரிகையை உருவாக்கினார்.

நாளடைவில், தன், ‘நியூயார்க் வேர்ல்ட்’ என்ற
பத்திரிகையின் மூலம், அரசியல் செல்வாக்கை பெற்றார்.
40 வயது நிரம்புவதற்குள், அமெரிக்காவில் மிகப்பெரிய
கோடீஸ்வரர் ஆனார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அப்போது அவர், பார்வையை
முற்றிலுமாக இழந்திருந்தார்.

பார்வை இழந்த நிலையிலும், சில அறிவாளிகளின்
துணையோடு, தன் பணியை சிறப்பாக செய்தார்.
அவர் உண்டாக்கிய அறக்கட்டளை மூலம் தான்,
ஆண்டுதோறும், ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்படுகிறது.

————————————
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: