விடுமுறை இல்லாத கடை எது?-விடுகதைகள்

 • 01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?

  தீபம்
 • 02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?

  நிலா
 • 03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?

  மஞ்சள்
 • 04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

  இதயம்
 • 05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

  தக்காளி
 • 06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?

  கடல்
 • 07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

  கண்
 • 08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?

  காளான்
 • 09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?

  நெல்லு
 • 10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?

  வேம்பு
 • 11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?

  காட்ஸ்
 • 12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?

  கண்ணீர்
 • 13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?

  வாய்
 • 14. விடுமுறை இல்லாத கடை எது?

  சாக்கடை
 • 15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?

  தீக்குச்சி
 • 16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?

  பாம்பு
 • 17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?

  கண் இமை
 • 18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

  ஆறு அல்லது அருவி
 • 19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

  வெங்காயம்
 • 20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

  நெருப்பு
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: