-
01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?
முதுகு -
02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
சிலந்தி வலை -
03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?
மின்சாரம் -
04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?
சிலந்தி வலை -
05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?
மணிக்கூடு -
06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?
தேன் -
07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?
ஊசி -
08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
மத்து -
09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?
துவாரம் -
10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?
காற்று -
11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?
வானொலிப் பெட்டி -
12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?
தலையணை -
13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?
மெட்டி -
14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?
தேனீ -
15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
வாழைப்பூ -
16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
தலை வகிடு -
17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
சித்தரத்தை -
18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
மொடக்கத்தான் -
19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?
இளநீர் -
20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?
புடலங்காய்
மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
செப்ரெம்பர் 14, 2018 இல் 11:09 முப (விடுகதைகள், Uncategorized)
kayshree said,
செப்ரெம்பர் 14, 2018 இல் 10:04 பிப
excellent