சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும்

 • 01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?

  புல்லாங்குழல்
 • 02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?

  ரத்தம்
 • 03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?

  உப்பு
 • 04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

  கத்தரிக்கோல்
 • 05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

  துடைப்பம் (தும்புத்தடி)
 • 06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

  ஊதுபத்தி
 • 07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

  பஞ்சு
 • 08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?

  எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)
 • 09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

  விக்கல்
 • 10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?

  சேவல்
 • 11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?

  கொசு
 • 12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?

  வாழைப்பழம்
 • 13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?

  அம்மி குழவி
 • 14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?

  நாக்கு
 • 15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?

  மின்விசிறி
 • 16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?

  கரும்பு
 • 17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?

  குயவர்
 • 18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?

  சோற்றுப்பானை
 • 19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?

  தேங்காய்
 • 20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?

  முட்டையிட்டு
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: