காவி உடையணியாத கள்ளத்தவசி

 • 01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

  கொக்கு
 • 02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?

  தவளை
 • 03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

  முட்டை
 • 04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?

  பாம்பு
 • 05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

  முள்
 • 06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?

  சேவல்
 • 07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?

  வானம்
 • 08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?

  சட்டை
 • 09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?

  மயில்
 • 10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?

  கிளி
 • 11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

  கப்பல்கள்
 • 12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

  ஒட்டகம்
 • 13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

  தொட்டா சுருங்கிச் செடி
 • 14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?

  விமானம்
 • 15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

  பப்பாளி விதைகள்
 • 16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

  கைகாட்டி
 • 17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?

  பச்சை குத்துதல்
 • 18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?

  வெங்காயம்
 • 19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

  அன்னம்
 • 20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?

  அச்சு வெல்லம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: