ஆரவாரம் இல்லாத கூட்டணி – விடுகதைகள்

eyes.jpg

 • 01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

  புகை
 • 02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?

  வியர்வை
 • 03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?

  உப்பு
 • 04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?

  சட்டை
 • 05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?

  எறும்புகள்
 • 06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?

  கொடி
 • 07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?

  துத்தநாகம்
 • 08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?

  முட்டை
 • 09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?

  மழை
 • 10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?

  பெட்ரோல்
 • 11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?

  இள‌நீ‌ர்
 • 12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?

  எறு‌ம்பு
 • 13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?

  ப‌ணி‌விடை
 • 14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

  தீ‌க்கு‌ச்‌சி
 • 15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

  கா‌லி‌ங்பெ‌ல்
 • 16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

  க‌ண் இமை
 • 17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

  அமைதி
 • 18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

  தென்றல்
 • 19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

  பட்டாசு
 • 20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

  எறும்புக் கூட்டம்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: