கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி

மாணவி ஸ்வகா. முதல் – மந்திரிக்கு எழுதிய கடிதம்.
—————————————
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை
சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16).
அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம்
ஏற்பட்டது. பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி
அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்-மந்திரியின் நிவாரண
நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு
வருகிறது.

இந்த தகவல் மாணவி ஸ்வகாவுக்கு தெரியவந்தது.
தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை
நிவாரணமாக வழங்க முடிவு செய்தார்.
இது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம்
எழுதினார்.

கடிதத்தை படித்த முதல்-மந்திரி நெகிழ்ச்சியடைந்து
பாராட்டினர். நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம்
ஒப்படைக்கும்படி கூறினார்.

இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர்
முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு
வழங்கினார்.

மாணவி வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மேல்
இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறினர்.

———————-
மாலைமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: