2016-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய
பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து இயக்குநர் சசி தனது அடுத்தப் படத்தைச்
சமீபத்தில் தொடங்கியுள்ளார்.
சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் கதாநாயகர்களாகவும்
காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்
காஷ்மிரா, தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகும் இப்படம்,
ஹிந்தியில் டப் செய்யப்படுகிறது.
1998-ல் சொல்லாமல் படத்தின் மூலம் இயக்குநராக
அறிமுகமான சசி, இதுவரை ஆறு தமிழ்ப் படங்களையே
இயக்கியுள்ளார்.
–
———————————
தினமணி
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்