நீதி நூல்களின் பயன் என்ன ? – வைரம் ராஜகோபால்

அவ்வையார் அருளிய, “ஆத்திச்சூடி’யில் உள்ள வாக்கியங்கள்
ஒவ்வொன்றும், ஒவ்வொரு அறிவுரையை சொல்லும். ஆரம்பப்
பள்ளிகளில், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற
நீதி நூல்களையும் பாடமாக வைத்து, பிள்ளைகளுக்கு அதன்
அர்த்தத்தை விளக்கிச் சொல்வர்.

இது, பிள்ளைகளின் மனதில் பதிந்து, அவர்களை
நல் வழிப்படுத்த உதவும். இப்படிப்பட்ட சிறந்த நூலான,
“ஆத்திச்சூடி’யின் முதல் வாக்கியமே, “அறஞ்செய விரும்பு’
என்பதுதான்

அறம் என்றால் தர்மம். தன்னிடமுள்ளவற்றில் ஒரு
பகுதியையாவது தேவையுள்ளவருக்கு தர வேண்டும் என்பது
இதன் பொருள்.

இதனால், பிறருக்கு உதவும் குணம் உண்டாகிறது.
ஈகை என்ற இந்த குணம், மிகவும் உயர்ந்ததாக சொல்லப்
படுகிறது. இப்படி அவ்வையாரால் இயற்றப்பட்ட
ஆத்திச்சூடியில், “அவ்வியம் பேசேல்’ என்ற ஒரு நீதியும்
உள்ளது.

அவ்வியம் என்றால் பொறாமை. பொறாமை கொண்ட
மனிதன், பிறரைப் பற்றி பொய்யாக எதையாவது
கதையை கிளப்பி விடுவான். பிறரை ஏளனம் செய்வான்
அல்லது கடுமையான சொற்களால் தரக்குறைவாக
பேசுவான்

அல்லது பயனில்லாத சொற்களை சொல்லிக்
கொண்டிருப்பான். இந்த நான்கும் நால்வகை
குற்றங்களாகும். பிறருடைய செம்மையான
வாழ்க்கையை கண்டு, இவன் பொறாமைப்படுகிறான்.

தானும் அப்படி ஒரு உயர்வான வாழ்க்கையை அடைய
வேண்டுமென்ற முயற்சி இன்றி, உயர்வாக உள்ளவனைக்
கண்டு பொறாமைப்படுவதில் பயனில்லை.

பிறரைக் கண்டு பொறாமை கொண்டு, மனதை உருட்டி
கொண்டிருப்பதில் என்ன பயன்?

நீயும் முயற்சி செய். மேலுக்கு வா. முயன்றால் முடியும்.
அப்போது, மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்படும்.
பொறாமைப்படுவதால் மனம் புழுங்கி, ஒடுங்கி போக
வேண்டியிருக்கும். இதனால், பயனில்லை.

நீதி நூல்கள் நிறைய உள்ளன. இவை, மனிதன்
திருந்துவதற்காக ஏற்பட்டவைகள். இவைகளையும் படித்து
வைக்கலாமே! ***

——————————–
வைரம் ராஜகோபால்
நன்றி- வாரமலர் –

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: