மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு

 

சென்னை :
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வரும் 16ம் தேதி துவங்க
இருந்த தனியார் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடு
இடங்களுக்கான கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு
49 வினாக்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,
மருத்துவ சேர்க்கைகான புதிய தரவரிசை பட்டியலை
வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்: இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்

இந்த உத்தரவுக்கு சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவின் படியே
தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் என மருத்துவ கல்வி
இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள
நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த
கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ தேர்வுகுழு செயலர் செல்வராஜன்
வெளியிட்ட அறிவிப்பு:

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வரும் 16ம் தேதி
முதல் 18ம் தேதி வரை நடத்தப்பட இருந்த தனியார் மருத்துவ
கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான
கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது.

கவுன்சிலிங் குறித்த மறுதேதி இணையளத்தில் வெளியிடப்
படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ
கவுன்சிலிங் இம்மாதம் 10, 11ம் தேதிகளில் ஆன்லைன் வழியே
நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முடிவுகள் வெளியீடு
நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார சேவைகள்
இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குழப்பம்:

தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான
முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இதில் 3,500க்கும்
மேற்பட்டோர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மேலும்
அந்தந்த மருத்துவ கல்லுாரிகளிலும் மாணவர்கள்
சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் மருத்துவ கல்லுாரிகளில்
சேர்ந்த மாணவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.

இதற்கு மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளும் சரியான
பதிலளிக்காமல் இருப்பதால் மாணவர்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.

————————————
தினமலர்

 

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: